அந்தமான் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தற்போது உருவாகியுள்ளது. இதன் காரணமாகத் தமிழகத்தில், அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மழைக்காலத்தில் மின் விபத்துகள் ஏற்படும் என்பதால், அதுகுறித்து தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை ஆலோசனைகளை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானம் தெரிவித்துள்ளது.
மழைக்காலங்களில் மின் விபத்துகளை எவ்வாறு தவிர்ப்பது குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானம் (TANGEDCO) தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ’கீழே விழுந்த மின் கம்பிகள்/கம்பங்கள் அருகில் செல்லாமல் விலகி இருக்கவும்.
அப்படி காணும்பட்சத்தில் எச்சரிக்கை அடையாளம் செய்து, மின்னகம் எண் 94987 94987ஐ அழைக்கவும்.
மின்கம்பம்/மின்மாற்றி/பகிர்மான பெட்டி அருகில் வாகனங்களை நிறுத்த வேண்டாம்.
தரமற்ற பிவிசி வயரைக் கொண்டு வீட்டிலிருந்து அருகாமையில் உள்ள கொட்டகைக்கோ/கழிவறைக்கோ கொண்டுசெல்ல வேண்டாம்.
மாடிகளில் துணி உரை வைக்கும்போது, மின்கம்பி மேலேயும் அருகிலும் இல்லை என்பதை உறுதி செய்யவும்’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.