மாநகராட்சி அதிகாரிகள் ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு தடை சொல்லவில்லை என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “விஜயகாந்த்திற்கு மிக லேசான வைரஸ் தொற்று இருந்தது. தற்போது பூரண நலமுடன் இருந்து வருகிறார். நாங்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டோம். எங்களுக்கு நெகட்டிவ் வந்தது. விஜயகாந்திற்கு மட்டும் லேசான அறிகுறி இருந்தது. மருத்துவமனை அறிக்கையும் தேமுதிக அறிக்கையும் ஒன்றுதான். முரன்பாடு ஏதும் இல்லை. இன்னும் ஓரிரு நாட்களில் விஜயகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். மீண்டும் வழக்கம்போல் பணிக்கு திரும்புவார்.
மாநகராட்சி ஸ்டிக்கர் ஒட்டத் தடை சொல்லவில்லை. ஸ்டிக்கர் ஒட்டினார்கள். அது கீழே விழுந்ததும் அவர்கள் எடுத்துக்கொண்டு சென்று விட்டார்கள் என்றுதான் தகவல் வந்தது. பணியாளர்கள் மறுப்பு தெரிவித்தது குறித்து தெரியவில்லை. ஸ்டிக்கர் ஒட்டுவதால் ஒன்றும் இல்லை. நாங்கள் தடை சொல்லவில்லை. தேமுதிக அரசின் விதிமுறைகளை பின்பற்றுகிறது. விஜயகாந்த் உடல்நலம் குறித்து நலம் விசாரித்த முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், எதிர்க்கட்சித்தலைவர், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி” எனத் தெரிவித்தார்.