“விக்ரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு எண்ணிக்கை உயரக்கூடும்” - எப்படி, ஏன்?

விக்கிரவாண்டி இடைத் தேர்தலை அதிமுக புறக்கணித்திருப்பது யாருக்கு சாதகம்? திமுகவுக்கா, பாமகவுக்கா அல்லது நாம் தமிழர் கட்சிக்கா? அரசியல் வல்லுநர்கள் சொல்வது என்ன? தற்போது பார்ப்போம்...
சீமான்
சீமான்புதிய தலைமுறை
Published on

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக, பாமக, நாம் தமிழர் என மும்முனைப் போட்டி உருவாகியுள்ளது. பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தேர்தலைப் புறக்கணித்துவிட்டது. அதன் கூட்டணி கட்சியான தேமுதிகவும் விலகிவிட்டது. இதன் பலன் யாருக்கு என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுபற்றி மூத்த பத்திரிகையாளர்கள் நம்மிடையே பேசினர்.

மூத்த பத்திரிகையாளர் துரை கருணா

“திருமங்கலம் இடைத்தேர்தலுக்கு பின்னர் ஆளுங்கட்சியே வெற்றி பெறும் என்பது எழுதப்படாத விதியாக உள்ளது. தேர்தல் புறக்கணிப்பு அதிமுகவுக்கு பலவீனம்” என்கிறார்.

சீமான்
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு: ஏன் தெரியுமா? - எடப்பாடி பழனிசாமி விளக்கம்

மூத்த பத்திரிக்கையாளரான பிரியன்

“திருமங்கலம் பார்முலா அணுகுமுறையில் ஆளும்கட்சி வெற்றிபெறும். ஆனால் அதிமுக போட்டியிடாதது மேலும் அதற்கு ஒரு பின்னடைவு. பிரதான எதிர்க்கட்சியான அதிமுக விலகியதால் ஆளும்கட்சியான தி.மு.க- வின் வெற்றி தற்போது எளிதாகியுள்ளது. அதிமுக 35% வாக்கும், பாமக 17% வாக்கும் வாங்கினார்கள். அதிமுக தமக்கு இருக்கும் வாக்கு செல்வாக்கை இழக்கிறார்கள். அதிமுக குறித்த எண்ணம், தமிழக மக்கள் மனதில் எழாமல் செய்துவிட்டனர்” என்றார்.

மூத்த பத்திரிகையாளர் பிரியன்
மூத்த பத்திரிகையாளர் பிரியன்

மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன்

“விக்ரவாண்டி தொகுதியில், கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 9,500 வாக்கு வித்தியாசத்தில்தான் தோல்வியை தழுவியது. தற்போது அதிமுக கூட்டணியில் தேமுதிக உள்ள நிலையில், திமுகவிற்கு கடும் போட்டியை ஏற்படுத்தியிருக்கலாம். இந்த சூழலில் அவர்களுடைய புறக்கணிப்பு பாமகவுக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது. என்றாலும் அந்த கட்சிகளின் வாக்குகள் நாம் தமிழர் கட்சிக்கு செல்வதற்கும் வாய்ப்பு இருக்கிறது

சீமான்
பாடப்புத்தகங்களில் இந்தியாவிற்கு பதில் பாரத்? NCERT இயக்குநர் கொடுத்த பதில் என்ன?

தேமுதிக ஆதரவுடன் பலமான போட்டியை அதிமுக அளித்திருக்கலாம். தெரிந்தே, பாஜக கூட்டணியில் உள்ள பாமகவுக்கு வாய்ப்பை கொடுத்திருக்கிறார்கள்” என்கிறார் மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன்.

அதேநேரம், கள நிலவரத்தை பொறுத்தவரை நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 40க்கு40 தொகுதியில் வெற்றி பெற்று அசுர பலத்துடன் உள்ளது. பாஜக கூட்டணியில் போட்டியிடும் பாமகவுக்கு பலமான தொகுதிகளில் ஒன்றாக விக்கிரவாண்டி பார்க்கப்படுகிறது. வட தமிழ்நாட்டில் பெரும்பான்மையாக வாழும் வன்னியர் உள் ஒதுக்கீடு விவகாரத்தை அந்த கட்சி கையில் எடுத்துள்ளது.

அதிமுக, தேமுதிக போட்டியிடாததும் பாமகவுக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஆளும் கட்சிக்கு இன்னொரு எடைத் தேர்தலாக மாறியுள்ளது என்பதே அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது..!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com