மிக்ஜாம் புயல் | “அடுத்த சில மணி நேரத்துக்கு கனமழை உண்டு; மிக கவனமாக இருங்கள்” - பிரதீப் ஜான்!

“மிக தெளிவான புயல் வந்து கொண்டிருக்கிறது. அடுத்த சில மணி நேரத்துக்கு கனமழை இருப்பதால் கவனமாக இருங்கள்” என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் X வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்
தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்PT Desk
Published on

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் X வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ”சென்னை மையப்பகுதியில் உள்ள மேகங்கள் இழுபடும்போது, அதை சுற்றியுள்ள பிற மேகங்கள் கடும் மழையை ஏற்படுத்தும். நிலைமை இப்போது மிக ஆபத்தான சூழலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. 2015-ம் ஆண்டோடு இப்போதுள்ள சூழலை ஒப்பிடுகிறார்கள். 2015ல் 24 மணி நேரத்தில் நுங்கம்பாக்கத்தில் 294 மி.மீ, மீனம்பாக்கத்தில் 345 மிமீ, தாம்பரத்தில் 494 மிமீ, செம்பரம்பாக்கத்தில் 475 மிமீ மழை பதிவானது.

X page
X pagejpt desk

இப்போது, 36 மணி நேரத்தில் நுங்கம்பாக்கத்தில் 440 மிமீ, செம்பரம்பாக்கத்தில் 320 மிமீ மழை பெய்துள்ளது. அதுமட்டுமன்றி 18 மணி நேரமாக கடலில் மையம் கொண்டுள்ள இந்த புயல், மழைநீரை ஆற்றிலிருந்து கடலில் கடக்க விடாமல் செய்துள்ளது. சென்னை, 2015-ஐ விட அதிகமாக மழையை பெற்றுள்ளது. ஆனால், செம்பரம்பாக்கத்தின் முழு தரவையும் இன்னும் பெற நாம் காத்திருக்க வேண்டியுள்ளது.

2015-உடன் ஒப்பிடாமல் பார்த்தால், இந்த புயல் தெளிவாக, மெதுவாக நகர்ந்து... கடலுக்கு அருகே நிலைகொண்டுள்ளது. மேலும் ஆறுகளையும் மூடியுள்ளது. மாநகரின் தென் பகுதியில் அதிக மழை பெய்துள்ளது. வட பகுதிகளில் உள்ள நீர்த்தேக்கங்களில் இன்னும் பெரியளவு மழையை எதிர்பார்க்கலாம்” என பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com