சென்னை | பலத்த இடியுடன் திடீரென வெளுத்து வாங்கிய கனமழை ! பிரதீப் ஜான் போட்ட ட்வீட்!

‘இந்த மழை சாமானியர்களுக்கான சந்தோஷ மழை’ என்று தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
பிரதீப் ஜான்
பிரதீப் ஜான்முகநூல்
Published on

வடகிழக்கு பருவமழை எப்போதும் அக்டோபர் மாதம் இறுதி வாரத்தில் தொடங்கும் நிலையில், இந்தமுறை 5 நாட்களுக்கு முன்னதாக, அக்டோபர் 15-ம் தேதியே தொடங்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அப்படி தொடங்கியவுடன் உருவான முதல் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, முன்னெப்போதும் இல்லாத வகையில் அதி கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடப்பட்டது. அக். 15 மற்றும் 16-ம் தேதிகளுக்குதான் இந்த எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. இதனால் அந்த இரு தேதிகளுக்கும் சென்னை உட்பட நான்கு மாவட்டங்களுக்கு அதிகனமழை எச்சரிக்கை விடப்பட்டு, ரெட் அலர்ட்டும் கொடுக்கப்பட்டது.

குறிப்பிட்டதுபடியே, 15 ஆம் தேதி காலையில் மழை வெளுத்து வாங்கியது. ஆனால், அன்றைய தினம் இரவில் அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தெற்கு ஆந்திராவை நோக்கி நகர்ந்ததால் 16 ஆம் தேதி அதி கனமழை பெய்வதற்கு பதிலாக, படிப்படியாக மழை குறைய ஆரம்பித்தது. இதனால், விடுக்கப்பட்டிருந்த ரெட் அலர்ட் அக்டோபர் 17 ஆம் தேதி வாபஸ் பெறப்பட்டது.

பிரதீப் ஜான்
மழை நேரத்தில் இரண்டு நாட்கள் கட்டணமில்லா உணவு.. பலபேரின் பசியைப் போக்கிய அம்மா உணவகங்கள்!

இந்தநிலையில், இன்று காலையில், திடீரென பலத்த இடிகளுக்கு மத்தியில் சென்னையில் கனமழை கொட்டி தீர்த்தது. இதையடுத்து, தனியார் வானிலை ஆய்வாளர் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் மழை குறித்த அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

"சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் வட தமிழகத்தின் சில பகுதிகளில் இன்று மழை பெய்துள்ளது. இன்று இரவு முதல் சனிக்கிழமை (நாளை) காலை வரை மீண்டும் வட உள் தமிழகம் உட்பட வட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும். KTCC-யில் (காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு) சில இடங்களில் டமால் டுமீல் (இடி மின்னலை குறிப்பிட்டு நகைச்சுவையாக) கிடைக்கும். இந்த மழை சாமானியர்களின் சந்தோஷ மழை!!!" என்று பதிவிட்டுள்ளார்.

என்னதான் சொன்னாலும், திடீரென வானிலையில் ஏற்பட்ட இந்த மாற்றம், வானிலை மையத்தையும் சரி, மக்களையும் சரி சற்று குழப்பத்தில் ஆழ்த்திவிட்டது என்றே கூறலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com