நாமக்கல்: உலக முட்டை தினம் - 10,000 முட்டைகளை இலவசமாக வழங்கிய கோழிப் பண்ணையாளர்கள்!

உலக முட்டை தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர் சங்கத்தின் சார்பில் பொது மக்களுக்கு 10,000 முட்டைகள் இலவசமாக வழங்கப்பட்டது.
10 ஆயிரம் முட்டைகளை இலவசமாக வழங்கிய கோழிப் பண்ணையாளர்கள்
10 ஆயிரம் முட்டைகளை இலவசமாக வழங்கிய கோழிப் பண்ணையாளர்கள்pt desk
Published on

செய்தியாளர்: எம்.துரைசாமி

வெளிநாட்டை காட்டிலும் இந்தியாவில் முட்டை நுகர்வு குறைவு என்பதால் பொது மக்களிடையே முட்டை உண்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து எடுத்துக் கூறும் விதமாகவும் அது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அக்டோபர் மாதம் 2வது வெள்ளிக்கிழமை உலக முட்டை தினம் கடைபிடிக்கப்படுகிறது.

10 ஆயிரம் முட்டைகளை இலவசமாக வழங்கிய கோழிப் பண்ணையாளர்கள்
10 ஆயிரம் முட்டைகளை இலவசமாக வழங்கிய கோழிப் பண்ணையாளர்கள்pt desk

இந்நிலையில், தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர் சங்கத்தின் சார்பில் வேகவைத்த முட்டைகள் இலவசமாக வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் தமிழ்நாடு கோழிப் பணியாளர்கள் சங்க தலைவர் சிங்கராஜ், செயலாளர் சுந்தராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு 10 ஆயிரம் முட்டைகளை இலவசமாக வழங்கினர்.

10 ஆயிரம் முட்டைகளை இலவசமாக வழங்கிய கோழிப் பண்ணையாளர்கள்
உலக பிரசித்தி பெற்ற கூத்தனூர் சரஸ்வதி அம்மன் கோவிலில் கோலாகலமாக நடந்த சரஸ்வதி பூஜை விழா!

மேலும் முட்டை உண்பதால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் சத்துகள் குறித்து எடுத்துக் கூறி பொதுமக்களுக்கு விழிப்புணர்வையும் ஏற்படுத்தினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com