மக்கள் அனைவரும் தங்களது வாழ்வு சிறக்க அஞ்சலக சிறுசேமிப்புத் திட்டத்தில் சேர்ந்து பயன்பெற வேண்டுமென தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.
உலக சிக்கன நாளையொட்டி முதலமைச்சர் வெளியிட்டுள்ள செய்தியில், மக்களின் சேமிக்கும் பழக்கத்தை வளர்க்கும் நோக்கில் ஆண்டுதோறும் அக்டோபர் 30-ஆம் தேதி உலக சிக்கன நாளாக கொண்டாடப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். "ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை போகாறு அகலாக் கடை" என்ற திருக்குறளை மேற்கோள்காட்டி சேமிப்பின் அவசியத்தை விளக்கிய எடப்பாடி பழனிசாமி, மக்கள் தங்கள் வருமானத்தின் ஒரு பகுதியை எதிர்காலத் தேவைக்காக சேமிக்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ளார்.
அஞ்சலக சிறுசேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம், சிறிய தொகை பன்மடங்காக பெருகுவதோடு, நாட்டின் வளர்ச்சித் திட்டப்பணிகளுக்கும் அந்தத் தொகை பயன்படுத்தப்படுகிறது என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.