பொறையார் விபத்து: போக்குவரத்து துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

பொறையார் விபத்து: போக்குவரத்து துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
பொறையார் விபத்து: போக்குவரத்து துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
Published on

பொறையார் பணிமனை விபத்து குறித்து பதிலளிக்குமாறு போக்குவரத்து துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாகை மாவட்டம் பொறையாரில் கடந்த 20-ஆம் தேதி அரசு போக்குவரத்துக் கழக பணிமனை கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்துக்குள்ளான போக்குவரத்து தொழிலாளர் பணிமனை, பழைய கட்டடம் என்பதால் தான் விபத்து ஏற்பட்டுவிட்டதுதாக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியிருந்தார். இதனிடையே விபத்து குறித்து சென்னை உயர்நீதிமன்றம் தானாகவே முன்வந்து விசாரித்தது.

இந்நிலையில் பொறையார் பணிமனை விபத்து குறித்து பதிலளிக்குமாறு போக்குவரத்து துறைக்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம், போக்குவரத்துக் கழக பணிமனை கட்டடங்களின் உறுதி தன்மையை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. மேலும் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு கூடுதல் நிவாரணத்தொகை வழங்கவும் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com