வறுமையிலும் ‘ஜே.இ.இ.’ தேர்வில் வென்ற பழங்குடியின மாணவி

வறுமையிலும் ‘ஜே.இ.இ.’ தேர்வில் வென்ற பழங்குடியின மாணவி
வறுமையிலும் ‘ஜே.இ.இ.’ தேர்வில் வென்ற பழங்குடியின மாணவி
Published on

ஏழ்மையான சூழ்நிலையிலும் ‘ஜேஇஇ’ தேர்வில் வென்று தேசிய தொழில் நுட்ப கல்லூரியில் சேர்ந்து பழங்குடியின மாணவி ஒருவர் அசத்தியுள்ளார்.

கோயம்புத்தூர் மாவட்டம் காரமடை பகுதியில் வெள்ளியங்காடு கிராமத்தின் மலைப் பகுதியில் அமைந்துள்ளது காளியூர். மலைவாழ் பகுதி மக்கள் வசிக்கக்கூடிய இந்தக் கிராமத்தில் 65 குடும்பங்கள் மட்டுமே உள்ளது. காளியூர் கிராமத்தில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து, ஜே.இ.இ தேர்வில் வெற்றி பெற்றுள்ளார் மாணவி சபிதா. இதன்மூலம் திருச்சியில் உள்ள தேசிய தொழில்நுட்ப கல்லூரியில் வேதியியல் பொறியியல் முதலாம் ஆண்டு சேர்ந்துள்ளார்.

எந்த ஒரு பயிற்சி வகுப்புக்கும் செல்லாமலே இத்தகைய நிலையை சபிதா அடைந்திருக்கிறார். மருத்துவராக வேண்டும் என்ற  தன்னுடைய கனவு நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் எட்ட முடியாத சூழலில், தான் 12வது படிக்கும் பொழுது எழுதிய ஜே.இ.இ தேர்வில் 62 சதவீதம் பெற்றதைக் கொண்டு தேசிய தொழில்நுட்ப கல்லூரியில் பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ளார்.

பள்ளியில் படிக்கும்போதே படிப்பின் மீது கொண்ட ஆர்வத்தினால் தன்னால் 12ஆம் வகுப்பில் 446/600 மதிப்பெண் எடுக்க முடிந்தது என்றும், தற்போது தேசிய தொழில்நுட்பக் கல்லூரியில் சேர்ந்திருப்பது என்பது எங்கள் ஊரிலேயே எனக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை என்றும் சபிதா மகிழ்ச்சி அடைகிறார். தன் தந்தை விவசாயக் கூலி என்பதால் தன்னால் கல்லூரியின் கட்டணத்தை செலுத்த முடியாத சூழலில், ஆசிரியர்கள் உதவி செய்து இந்த ஆண்டிற்கான கட்டணத்தை கட்டியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். வரும் ஆண்டுகளில் கல்லூரிக்கான கட்டணத்தை எப்படி கட்ட உள்ளேன் என்பது கேள்விக்குறியாக உள்ளது என்றும், யாராவது உதவினால் தன்னுடைய கனவு நனவாகும் என்று அவர் உதவிக் கேட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com