ஸ்டெர்லைட் சட்ட விரோத நிலம்? மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ்

ஸ்டெர்லைட் சட்ட விரோத நிலம்? மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ்
ஸ்டெர்லைட் சட்ட விரோத நிலம்? மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ்
Published on

ஸ்டெர்லைட் ஆலைக்கு சட்டவிரோதமான முறையில் 324 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டதாக எழுந்த புகாரில் விளக்கம் கேட்டு சிப்காட்டுக்கு தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ் அனுப்பி வைத்துள்ளது.

தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி கடந்த 50 நாட்களுக்கு மேலாக அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் தமிழர்களும் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தை அவர்கள் வசிக்கும் நாடுகளில் முன்னெடுத்துள்ளனர். இந்தச் சூழலில் ஸ்டெர்லைட் ஆலைக்கு சட்ட விரோதமான முறையில் 324 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர் முத்துராமன் ஆதாரங்களுடன் புகார் தெரிவித்திருந்தார். இதுதொடர்பான செய்தியும் புதிய தலைமுறையில் வெளியானது.

புதிய தலைமுறை செய்தி எதிரொலியாக தற்போது தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. சட்ட விரோதமாக நிலம் ஒதுக்கப்பட்டது குறித்து சிப்காட் திட்ட இயக்குநர் விளக்கம் அளிக்க வேண்டும் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 15 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்றும் அதில் தெரிவித்துள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com