பொள்ளாச்சி: டாப்சிலிப்பில் அரசு சார்பில் கொண்டாடப்பட்ட யானை பொங்கல்

பொள்ளாச்சி: டாப்சிலிப்பில் அரசு சார்பில் கொண்டாடப்பட்ட யானை பொங்கல்
பொள்ளாச்சி: டாப்சிலிப்பில் அரசு சார்பில் கொண்டாடப்பட்ட யானை பொங்கல்
Published on

பொள்ளாச்சி அருகே உள்ள டாப்சிலிப்பில் கொண்டாடப்பட்ட யானை பொங்கல் நிகழ்ச்சியை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகம் உலாந்தி வனச்சரகம் டாப்சிலிப் கோழி கமுத்தியில் கும்கி கலீம், சின்னதம்பி, அரிசி ராஜா உட்பட இருபத்தி ஏழு காட்டு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழக அரசின் உத்தரவின் பேரில் இங்கு ஆண்டுதோறும் யானை பொங்கல் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது வருகிறது.

இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரானோ வைரஸ் தொற்று காரணமாக கொண்டாடப்படாமல் இருந்த யானை பொங்கல் நிகழ்ச்சி இந்தாண்டு நடைபெற்றது. தமிழக அரசு கூடுதல் தளர்வுகள் அறிவித்துள்ள நிலையில், சமூக இடைவெளி மற்றும் முக்கவசம் அணிந்து டாப்சிலிப் பகுதிக்கு முன்பதிவு செய்த சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு, யானை வளர்ப்பு முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதைத்தொடர்ந்து இன்று யானை பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

இதையடுத்து பழக்குடியின மக்கள் புதுபானையில் பொங்கல் வைத்து அங்குள்ள விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்து, வளர்ப்பு யானைகளுக்கு பழம், கரும்பு, சத்துமாவு உணவாக வழங்கப்பட்டது. மேலும் வளர்ப்பு யானைகள் தும்பிக்கைகளை தூக்கி விநாயகரை வழிபாடு செய்த காட்சி அங்கிருந்த சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்ந்தது. யானை பொங்கல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக சுற்றுலா பயணிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com