“திருவள்ளுவர் விவகாரத்தை கட்சிகள் பெரிதாக்கக் கூடாது” - மதுரை ஆதீனம்

“திருவள்ளுவர் விவகாரத்தை கட்சிகள் பெரிதாக்கக் கூடாது” - மதுரை ஆதீனம்
“திருவள்ளுவர் விவகாரத்தை கட்சிகள் பெரிதாக்கக் கூடாது” - மதுரை ஆதீனம்
Published on

திருவள்ளுவர் விவகாரத்தை கட்சிகள் பெரிதுபடுத்தக்கூடாது என்று மதுரை ஆதீனம் புதிய தலைமுறைக்கு பிரத்யேக பேட்டியளித்துள்ளார்.

மதுரை ஆதீனம் அளித்த பேட்டியில், “அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு எப்படி வந்தாலும், தமிழக மக்கள் மட்டுமல்லாமல், இந்தியாவில் வாழும் 130 கோடி மக்களும் அமைதியை கட்டிக் காப்பாற்ற வேண்டும். நாட்டில் வாழக் கூடிய அனைவரும் ஒரே இறைவனின் குழந்தைகள். சாதி, மதத்தால் நாம் பிரிந்துவிடக் கூடாது. எந்த இடத்திலும் வன்முறை ஏற்படாமல் இந்து, இஸ்லாமிய சகோதரர்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். இந்த தீர்ப்பின் மூலம் நாட்டில் அமைதி இருக்க வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பு அனைவருக்கும் பொதுவானது.

கடவுள் நம்பிகையையே 1330 திருக்குறள்களும் எடுத்துரைக்கின்றன. உலகத்தில் வாழும் அனைவருக்கும் திருக்குறள் வேத நூலாக உள்ளது. 
பாரத பிரதமர் நரேந்திர மோடி திருக்குறள், திருவள்ளுவர் சிறப்பை பற்றி பேசுகின்றார். மத்திய அமைச்சர்கள் புறநானூறு, அகநானூறு குறித்து பேசுகின்றனர். தமிழகத்திற்கும், தமிழர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் மத்திய அரசு பணிகளை செய்கின்றது. 

ஆர்வத்தின் அடிப்படையில் அர்ஜூன் சம்பத் இப்படி செய்துள்ளார். இதனை யாரும் பெரிதுபடுத்த வேண்டாம். எல்லா மதம், மொழி, சாதியினருக்கும், நாட்டினவருக்கும் திருவள்ளுவர் பொதுவானவர். எதாவது கோயிலில் அசம்பாவிதம் நடந்தால் அந்த கோயிலில் எப்படி பரிகாரம் செய்யப்படுமோ, அதைபோல் தான் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் செய்துள்ளார்” என்று கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com