“சமத்துவம், சமூக நீதி, பெண் விடுதலைக்கு குரல் கொடுத்த பகுத்தறிவு பகலவன்”- அரசியல் தலைவர்கள் வாழ்த்து

தந்தை பெரியாரின் 146ஆவது பிறந்தநாளையொட்டி முக்கிய அரசியல் தலைவர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
அரசியல் தலைவர்கள் வாழ்த்து
அரசியல் தலைவர்கள் வாழ்த்துமுகநூல்
Published on

சாதி வேற்றுமையும், பெண்ணடிமைத்தனமும் புரையோடிப் போயிருக்கும் சமூகத்தில் சமத்துவம் உண்டாக தன் இறுதி மூச்சுவரை அயராது பாடுப்பட்ட தன்னிகரில்லாத தலைவர் தந்தை பெரியார். சாதியத்தால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், ஆண்களால் அடிமைப்படுத்தப்பட்ட பெண்களுக்கும் ஆதரவாக ஓங்கிய குரல் கொடுத்ததும் தந்தை பெரியார்தான்.

மூடநம்பிக்கைக்கு எதிராக அறிவியலை முன்வைத்த இவர். எதையும் பகுத்தறிய வேண்டும் என்று சொன்னவர். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, சமூக நீதியை முன்னிருத்தி, முதன் முதலாக அரசியல் அமைப்புச் சட்டத்தத் திருத்தம் செய்ய வைத்தவர். ஆனால், எந்த அதிகார மன்றத்திற்கும் செல்லவும் இல்லை, தன்னை முன்னிருத்தவுமில்லை.

அரசியல் தலைவர்கள் வாழ்த்து
தந்தை பெரியார் பிறந்த தினம் இன்று | “மதம் மனிதனை மிருகமாக்கும், சாதி மனிதனை சாக்கடையாக்கும்”

21 நூற்றாண்டில் நாம் வாழ்ந்து கொண்டிருந்தாலும் , விலங்குகளுக்கு காட்டும் கருணையில், இம்மி அளவு கூட தனது சக மனதனுக்கு கொடுக்காத, சாதிகளும், அதன் விஷ வேர்களும் நிறைந்த சமுதாயத்தில்தான் நாம் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

தந்தை பெரியார் பிறந்த தினம் இன்று
தந்தை பெரியார் பிறந்த தினம் இன்று

சீர்த்திருந்தங்கள் பல கண்ட போதும், இங்கு சாதிய வன்முறைகள் தீர்ந்தபாடில்லை... ஆனால், சாதியத்தின் கொடுமை உச்சில் இருந்த காலத்திலும் “மதம் மனிதனை மிருகமாக்கும், சாதி மனிதனை சாக்கடையாக்கும்” என்று முழக்கமிட்டு, தத்துவ ஞானியாக வாழ்ந்து மறைந்து சென்றிருக்கிறார்..

பெரியாரின் 146 வது பிறந்தநாளான இன்றைய தினம் சமூக நீதி நாளாகவும் கடைபிடிக்கப்படுகிறது.

இந்நிலையில், பெரியாரின் பிறந்தநாளையொட்டி, பல முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அதன் சிறுதொகுப்பை இங்கே காணலாம்...

முதலமைச்சர் ஸ்டாலின்

தந்தை பெரியாரின் 146ஆவது பிறந்தநாளையொட்டி அவரது படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து தன் எக்ஸ் தள பக்கத்தில், “புரட்டுக் கதைகளுக்கும் - வறட்டு வாதங்களுக்கும் வளைந்து கொடுக்காதீர்கள். எல்லாவற்றுக்கும் மேலானது சுயமரியாதை என இனமான உணர்வூட்டி நிமிர்நடை போட வைத்த பகுத்தறிவுப் பகலவனுக்குப் புரட்சி வணக்கம்!

இன்று உலகம் முழுவதும் தமிழர் உயர்ந்த நிலைகளில் இருப்பதற்கு, தந்தை பெரியாரின் சிந்தனையும் உழைப்புமே அடித்தளம்! ஆயிரமாண்டு மடமையைப் பொசுக்கிய அவரது அறிவுத்தீதான், நமது பாதைக்கான வெளிச்சம்! அந்த வெளிச்சத்தில் சமத்துவ உலகத்தை நிறுவுவதே நமது தலையாய பணி!” என்றுள்ளார் முதல்வர்.

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி

சமத்துவம், சமூகநீதி, பெண் விடுதலை ஆகிய உயரிய கோட்பாட்டு வேள்விகளை நம்மில் விதைத்த அவர்தம் பிறந்தநாளில், அடிப்படைவாதத்திற்கு துளியும் இடமின்றி, யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பொதுவுடைமைச் சமூகத்தை கட்டமைக்க உறுதியேற்போம்” என்றுள்ளார் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

உடலால் மறைந்தாலும்; என்றும் மறையாத - எக்காலமும் பொருந்துகிற திராவிடத் தத்துவமாய் நம்மோடு வாழ்கின்ற பெரியாரின் கருத்துக்களை அடுத்தடுத்த தலைமுறைக்கு இன்னும் வேகத்தோடும் – ஆழத்தோடும் கொண்டு சேர்க்க உறுதியேற்போம்” என்றுள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

திமுக எம்.பி கனிமொழி

“பள்ளிக்கூடங்கள் பகுத்தறிவு கற்றுத்தரட்டும். வகுப்பறைகளில் சமத்துவம் ஓங்கட்டும். பாடங்களில் பிற்போக்கு ஒழியட்டும். மாணவர்களிடம் பெரியார் பேசட்டும்” என்று கூறி,

‘அறிவியலுக்கு புறம்பானதை நம்பாதே!

அனைத்தையும் சமத்துவம் பழகு!

எதையும் நம்புவதற்கு முன் எதிர்த்து கேள்வி கேள்!

பெண்ணுரிமை பேசு!

சாதி, மதத்தால் பிளவுபடாதே!’

என்று பள்ளி குழந்தைகளுக்கு பெரியார் பாடம் எடுப்பதுபோன்ற புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார் எம்.பி. கனிமொழி கருணாநிதி.

மேலும் ‘ “It is the duty of every citizen to develop a scientific temper,humanism,and the spirit of inquiry and reform” - Constitution of India’ என்றும் குறிப்பிட்டுள்ளார் கனிமொழி.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, பெரியாருக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

அதிமுக வைகைச்செல்வன்

“ஈ.வெ.ரா வேறு...! நாம் வேறா..? சுயமரியாதையின் ஆணிவேரே..! 146வது பிறந்தநாள் வணக்கம்..!” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ்.வைகைச்செல்வன் பதிவிட்டுள்ளார்.

தவெக தலைவர் விஜய்

“சாதி, மத ஆதிக்கம் மற்றும் மூடப்பழக்க வழக்கங்களால் விலங்கிடப்பட்டுக் கிடந்த தமிழக மக்களிடையே விழிப்புணர்வை விதைத்தவர். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சுய விடுதலை வேட்கையின் மூலம், ஏற்றத் தாழ்வுகளால் உண்டாக்கப்பட்ட அடிமைத் தளைகளை அறுத்தெறிந்தவர். மக்களைப் பகுத்தறிவு மனப்பான்மையுடன் போராடத் தூண்டியவர்.

சமூகச் சீர்திருத்தவாதி, பகுத்தறிவுப் பகலவன், தென்னகத்தின் சாக்ரட்டீஸ், தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளில், அவர் வலியுறுத்திய பெண் உரிமை, பெண்கல்வி, பெண்கள் பாதுகாப்பு, சமத்துவம், சம உரிமை, சமூகநீதிப் பாதையில் பயணிக்க உறுதியேற்போம்!” என்றுள்ளார் தவெக தலைவர் விஜய்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com