விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: புறக்கணித்த காரணம் சொன்ன இபிஎஸ்... மெல்ல மெல்ல சூடாகும் அரசியல் களம்!

விக்கிரவாண்டியில் இடைத்தேர்தல் நியாயமாக நடைபெறாது என்றும், பணத்தையும், பரிசுப் பொருட்களையும் திமுக வாரி இறைக்கும் எனவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்pt web
Published on

அதிமுக புறக்கணித்த காரணம் என்ன?

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் நிலையில், தாங்கள் போட்டியிடப் போவதில்லை என அதிமுக அறிவித்தது. அதிமுகவின் நிலைப்பாட்டை பலரும் விமர்சித்து வந்த சூழலில் இதற்கு விளக்கமளித்த அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடக்காது என்பதால் புறக்கணிப்பதாக கூறியுள்ளார். அதேநேரத்தில் 2026-ல் அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் எனவும் உறுதிப்பட தெரிவித்தார்.

இதுதொடர்பாக பேசிய அவர், “திமுக எல்லா ஆட்சி அதிகார பலத்தையும் பயன்படுத்துவார்கள், பணத்தை வாரி இறைக்கும். பரிசுப்பொருட்களை அள்ளிக்கொடுக்கும். எல்லா அமைச்சர்களையும் பூத் வாரியாக பிரித்து பணமழையை பொழிய வைக்கும். ஜனநாயகப் படுகொலை நடைபெறும். சுதந்திரமாக மக்கள் வாக்களிக்க முடியாது. அதனால்தான் அதிமுக இந்த தேர்தலை புறக்கணிக்கிறது” என தெரிவித்தார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு: ஏன் தெரியுமா? - எடப்பாடி பழனிசாமி விளக்கம்

எந்த விதத்தில் இதை நியாயப்படுத்த முடியும்?

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்துள்ளது அவர்களது இயலாமையை காட்டுவதாக திமுக விமர்சித்துள்ளது. எந்த சூழலிலும் வெற்றி பெற முடியாது என்பதை உணர்ந்தே அதிமுக இந்த முடிவை எடுத்துள்ளதாக அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக பேசிய அவர், “எந்தச் சூழலிலும் அதிமுக வெற்றி பெற முடியாது. அதை அவர்கள் தெரிந்திருக்கிறார்கள். எனவே தங்களது இயலாமையை காட்டுவதுதான்; இதில் வேறு ஒன்றும் சொல்வதற்கு இல்லை. 10 வருடங்கள் ஆட்சியில் இருந்த ஒரு கட்சியால் தேர்தலை சந்திக்க முடியாதா? எந்த விதத்தில் இதை நியாயப்படுத்த முடியும்?” என தெரிவித்துள்ளார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில்தான் அதிமுக புறக்கணித்துள்ளதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடாதது மேலிடத்தின் உத்தரவு என பாஜகவை மறைமுகமாக ப. சிதம்பரம் சுட்டிக்காட்டியுள்ளார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்
ரஷ்யா - உக்ரைன் போர்... தீர்வு ஏற்படுத்துவதற்காக நடந்த அமைதி உச்சி மாநாடு.. கையெழுத்திடாத இந்தியா..

தேசிய ஜனநாயக கூட்டணிக்கே வாய்ப்பு..

தேர்தலில் போட்டியிடுவது, புறக்கணிப்பது பற்றி அந்தந்த கட்சிகளே முடிவுகளை எடுக்கும் என பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கூறியுள்ளார். அதிமுகவின் புறக்கணிப்பு முடிவில், பாஜகவிற்கு எந்த தொடர்பும் இல்லை எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக பேசிய வானதி சீனிவாசன், “பாஜகவைப் பற்றி சொல்வதற்கு வேறு ஒன்றும் இல்லை. இதுபோன்ற சின்ன சின்ன விஷயங்களில், பாஜக அதை செய்கிறது, இதைச் செய்கிறது என சொல்வதைத் தவிர காங்கிரஸ் கட்சியினருக்கு வேறு வேலை கிடையாது. ஒவ்வொரு கட்சியும் அவர்களது முடிவுகளை அவர்களாகவே எடுக்கிறார்கள். பாஜகவைப் பொருத்தவரை தேசிய ஜனநாயகக் கூட்டணியில், கூட்டணிக் கட்சி போட்டியிடுகிறது. வெற்றிவாய்ப்பை எதிர்பார்த்துதானே போட்டியிடுகிறோம். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது” என தெரிவித்தார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்துள்ளதை விமர்சித்துள்ள அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், திமுக வெற்றி பெறத் துடிப்பது தங்களை வளப்படுத்திக் கொள்வதற்காகத்தான் என்று குற்றம் சாட்டியுள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிக் கணக்கை தொடங்கிட உழைத்திட வேண்டுமாய் அமமுக தொண்டர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்
பதற்றத்திலேயே இருக்கும் மணிப்பூர்.. முதல்வரின் பாதுகாப்பு வாகனங்களின் மீதே நடந்த துப்பாக்கிச்சூடு

தொண்டர்களுக்கு கடிதம் எழுதிய ராமதாஸ்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலையொட்டி பாமக தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ள ராமதாஸ், திமுகவின் துரோகத்திற்கு கணக்கு தீர்ப்பதற்கான களம்தான் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் என்றும், வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை வென்றெடுக்க இது மிகச்சிறந்த வாய்ப்பு என்றும் கூறியுள்ளார்.

இதனிடையே அதிமுகவின் கூட்டணி கட்சியான தேமுதிகவும் இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. தேர்தல் ஜனநாயகம் கேள்விக்குறியாகியுள்ள சூழலில் தேர்தலைப் புறக்கணிப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவைத் தொடர்ந்து தேமுதிகவும் புறக்கணிக்கிறது!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com