டிகேஎஸ் இளங்கோவன், ஜெயக்குமார், விஜய், தமிழிசை
டிகேஎஸ் இளங்கோவன், ஜெயக்குமார், விஜய், தமிழிசை pt web

நீட் விவகாரம்: விஜய் எதிர்ப்பு.. “வலுவான குரல் அல்ல... வருந்தத்தக்க குரல்” தலைவர்கள் சொல்வதென்ன?

“நீட் தேர்வு விவகாரத்தில் தவெக தலைவர் விஜய், நீட் விலக்குதான் ஒரே தீர்வு” என தனது கருத்தினை தெரிவித்த நிலையில், புதிய தலைமுறைக்கு பிரத்யேகமாக அரசியல் தலைவர்கள் கூறியதை இங்கே பார்க்கலாம்...
Published on

நீட் விலக்கு ஒரே தீர்வு - விஜய்

தமிழக வெற்றிக்கழகம் சார்பில், கடந்த 2023-24 கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவியர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. இதன் முதற்கட்ட விழா சில தினங்களுக்கு முன் முடிவடைந்த நிலையில், 2வது கட்ட விழாவானது இன்று சென்னை திருவான்மியூரில் நடைபெற்று வருகிறது.

இந்நிகழ்வில் பேசிய தமிழக வெற்றிக் கழகத்தின் விஜய், “நீட் தேர்வில் பல குளறுபடிகள் நடந்ததாக செய்திகளைப் பார்த்தோம். அதன்பின் நீட் தேர்வின் மேல் மக்கள் மத்தியில் இருந்த நம்பகத்தன்மையே போய்விட்டது. இதற்கெல்லாம் நீட் விலக்குதான் ஒரே தீர்வு. நீட் ரத்துகோரி தமிழக சட்டமன்றம் கொண்டு வந்திருக்கும் தீர்மானத்தை நான் மனப்பூர்வமாக வரவேற்கிறேன். ஒன்றிய அரசு காலதாமதம் செய்யாமல் உடனடியாக இவ்விவகாரத்தில் தீர்க்க வேண்டும்” என தெரிவித்தார்.

டிகேஎஸ் இளங்கோவன், ஜெயக்குமார், விஜய், தமிழிசை
நீட் விலக்கு : “நடந்தாலும் நடக்கவிடமாட்டாங்க..” - தவெக விஜய் அதிரடி பேச்சு!

“நீட் ரத்திற்கு ஆதரவு தெரிவிப்பவர்களை வரவேற்போம்” - டிகேஎஸ் இளங்கோவன்

விஜய்யின் பேச்சு தொடர்பாக திமுக செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் புதிய தலைமுறையிடம் பிரத்யேகமாக தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். அவர் கூறுகையில், “முதலில் நீட் தேர்வுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தது திமுகதான். இன்று அது இந்தியா முழுவதும் பரவி, அதில் மோசடி நடைபெறுகிறது என்ற அடிப்படையில் அதைக் கூடாது என்கிறார்கள். நீட்டிற்கு எதிரான நிலைப்பாட்டை விஜய்யும் எடுத்திருப்பது உண்மையிலேயே மகிழ்ச்சிக்குரிய ஒன்றுதான்.

திமுக செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன்
திமுக செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன்

கல்வி பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டதில் இருந்து கல்வியின் விலை கூடுவிட்டது. ஒன்றிய அரசின் பொதுப்பட்டியலில் இருந்து கல்வியை மாநிலப்பட்டியலுக்கு மாற்றினால்தான் பல்வேறு பிரச்சனைகளுக்கு முறையாக தீர்வு காணமுடியும். இம்முறை நாடாளுமன்றத்தில் பலரும் அதை பேசி இருந்தார்கள்.

நீட் விவகாரத்தில் பல்வேறு மோசடிகள் நடந்துள்ளன என்பது தெரிந்த பிறகு அதை யார் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? பல கோடி ரூபாய்கள் அதில் புழங்குகின்றன. கூலித் தொழில் செய்பவர்களின் பிள்ளைகள் அதிக அளவில் மதிப்பெண்கள் எடுத்தும், பணம் இல்லாத காரணத்தால் மருத்துவப்படிப்பில் சேரமுடியவில்லை என்று தற்கொலை செய்துகொள்கின்றனர் என்றால் இதைவிட மோசமான தேர்வுமுறை இருக்காது. நீட் தேர்வு உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும், இதற்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் அனைவரையும் மதிப்போம், வரவேற்போம்” என்றார்.

டிகேஎஸ் இளங்கோவன், ஜெயக்குமார், விஜய், தமிழிசை
ஈடன் மேஜிக், ஐபிஎல் அசத்தல், மிரட்டல் பேட்டிங்... ஹேப்பி பர்த்டே ஹர்பஜன் சிங்!

“தமிழ்நாட்டில் திராவிடம்தான்” - அதிமுக ஜெயக்குமார்

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், “நீட் விலக்கு என்பது நல்லவிஷயம். அது எங்களுடைய கொள்கை. ஆனால் திமுகவிற்கு அது கொள்கை அல்ல. சந்தர்ப்பவாதாம். அந்தவகையில், தவெக தலைவர் விஜய் குரல் கொடுத்துள்ளது வரவேற்க தகுந்த ஒரு கருத்து.

ஜெயக்குமார்
ஜெயக்குமார்

தமிழ்நாட்டில் திராவிடம் என்பதுதான் எடுபடும். எனவே திராவிடர் கொள்கைகளை கையில் எடுத்துள்ளார். எது எப்படி இருந்தாலும் சரி, திராவிடத்தைத் தவிர தேசியத்திற்கு தமிழ்நாட்டில் வேலை இல்லை. விஜய் திராவிட அரசியல் பேசினால் எங்களுக்கு பாதிப்பு இல்லையா என கேட்கிறீர்கள். எங்களது திராவிட கொள்கைகளில் எவ்வித மாறுபாடும் கிடையாது.

கருத்து என்பதை எல்லோரும் சொல்லலாம். இதை நீங்கள் சொல்லக்கூடாது என நாம் யாரையும் சொல்ல முடியாது. நல்ல கருத்து என்றால் நிச்சயமாக வரவேற்க தகுந்த விஷயம்தானே. ஆனால் எந்த அளவிற்கு அவர்கள் தங்களது கருத்துக்கள், கொள்கைகளை எடுத்துச் செல்கிறார்கள் என்பதை தேர்தல் காலம்தான் முடிவு செய்யும். அதுதொடர்பாக நான் எதையும் சொல்ல விரும்பவில்லை” என தெரிவித்துள்ளார்.

டிகேஎஸ் இளங்கோவன், ஜெயக்குமார், விஜய், தமிழிசை
“ராமர் உண்மையில் இருக்கார்...” - சீமான் சொன்ன காரணம்!

“விஜய் புள்ளி விவரத்தை எடுத்து பார்க்கட்டும்” - கரு நாகராஜன்

தமிழ்நாடு மாநில பாஜக துணைத்தலைவர் கருநாகராஜன் இதுதொடர்பாக கூறுகையில், “விஜய் கூறி இருப்பது அவருடைய கருத்து. கருத்து சொல்வதற்கான உரிமை எல்லோருக்கும் இருக்கிறது. நீட்டைக் கொண்டு வந்த காங்கிரஸ் திமுக கூட்டணி இன்றும் இருக்கிறது. இன்று ஆளும் கட்சி அதே நீட்டை எதிர்த்து தீர்மானம் கொண்டு வருவதையும் பார்க்கிறோம்.

விஜய் கடந்த 20 ஆண்டுகள் கணக்கெடுத்து, பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மாணவர்கள் எத்தனைபேர் மருத்துவர் ஆகியுள்ளார்கள். நீட் வந்ததன் பின் எத்தனைபேர் மருத்துவர் ஆகியிருக்கிறார்கள் என்ற புள்ளிவிவரத்தை விஜய் சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

கருத்தாக என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். நீட்டை கொண்டு வந்தது காங்கிரஸ் திமுக கூட்டணி. கல்வி பொதுப்பட்டியலுக்கு கொண்டு வரப்பட்டது காங்கிரஸ் காலத்தில் என்பதையும் விஜய் தெரிந்துகொள்ள வேண்டும். நீட் பாஜக கொண்டு வந்தது அல்ல” என தெரிவித்தார்.

டிகேஎஸ் இளங்கோவன், ஜெயக்குமார், விஜய், தமிழிசை
அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்ட கருத்துக்கள்; சபாநாயகருக்கு கடிதம் எழுதிய ராகுல் காந்தி!

வருந்தத்தக்க குரல்

இதுதொடர்பாக தமிழிசை சௌந்தரராஜன் கூறுகையில், “இது வலுவான குரல் அல்ல... வருந்தத்தக்க குரல்.. மாணவ சமுதாயத்திற்கு உள்ள பிரச்னையை பாஜகவின் பிரச்சனையாக முத்திரை குத்துகிறார்கள். எல்லோரும் சொல்கிறார்கள் என்பதற்காக மாணவர்களுக்கு நன்மை தரும் திட்டத்தை வெளித்தள்ள முடியாது.

தமிழிசை
தமிழிசைபுதிய தலைமுறை

நீட் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மாணவர்களுக்கு எதிராக இருக்கிறது என்பதை விஜய் சொல்லிய்யுள்ளார். அதை நான் மறுக்கிறேன். நீட் தேர்வில் அனைத்து இடஒதுக்கீடும் பின்பற்றப்படுகிறது” என தெரிவித்தார்.

டிகேஎஸ் இளங்கோவன், ஜெயக்குமார், விஜய், தமிழிசை
நீட் விவகாரம்... “தமிழக அரசு கொண்டு வந்த தீர்மானத்தை மனப்பூர்வமாக வரவேற்கிறேன்” தவெக தலைவர் விஜய்
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com