ஊரடங்கை மீறி சாலைகளில் சுற்றுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் காவல்துறை

ஊரடங்கை மீறி சாலைகளில் சுற்றுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் காவல்துறை
ஊரடங்கை மீறி சாலைகளில் சுற்றுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் காவல்துறை
Published on

தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றியதாக கடந்த 23 மற்றும் 24-ஆம் தேதிகளில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் மீது வழக்குப்பதிந்து, 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

ஊரடங்கை அமல்படுத்திய நாள் முதல் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் அதனையும் மீறி வாகனங்களில் சுற்றித்திரிவோரை பிடித்து நூதன முறையில் தண்டனை அளிப்பதோடு அவர்கள் மீது சட்டரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், கடந்த 23 மற்றும் 24ஆம் தேதிகளில் மட்டும் சென்னையில் சட்டம் - ஒழுங்கு காவல்துறையினர் சார்பில், ஊரடங்கை மீறியதாக 32 ஆயிரத்து 414 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 20 ஆயிரத்து 972 வாகனங்களையும் பறிமுதல் செய்துள்ளனர். இதேபோல், போக்குவரத்து காவல்துறையினர் சார்பில், சென்னையில் ஊரடங்கை மீறியதாக 81 ஆயிரத்து 490 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் 23 ஆயிரத்து 216 இருசக்கர வாகனங்கள், ஆயிரத்து 16 மூன்று சக்கர வாகனங்கள், 174 நான்கு சக்கர வாகனங்கள் என 24 ஆயிரத்து 406 வாகனங்கள் பறிமுதல் செய்துள்ளதாக போக்குவரத்து காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு முடக்கத்தை மக்கள் கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தி சென்னையில் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com