இனி வாழ்க்கையே வேண்டாம் என்ற எண்ணத்தில் தற்கொலைக்கு முயன்றவரை போலீசார் இருவர் காப்பாற்றியுள்ளனர்.
வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையத்தில் நேற்றிரவு ஒருவர் ரயில் வரும் திசையை நோக்கி தண்டவாளத்தில் வேகமாக நடந்து சென்றிருக்கிறார். அவரை அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கோதண்டராமன் மற்றும் அஜீஸ் என்கிற இரண்டு ஆர்பிஎஃப் போலீசார் பார்த்துள்ளனர். தண்டவாளத்தில் நடந்து சென்றவரின் தவறான மன ஓட்டத்தை அறிந்த போலீசார் அவரை தண்டவாளத்தில் இருந்து நகர வலியுறுத்தியுள்ளனர். ஆனால் அவர் விடாப்பிடியாக, எனக்கு வாழப் பிடிக்கவில்லை. வாழ்க்கையை முடித்துக் கொள்கிறேன் எனக் கூறியுள்ளார். ஒருவழியாக அவரை தண்டவாளத்தில் இருந்து போலீசார் வெளியேற்றினர். இந்த சம்பவம் நடந்த சில நிமிடங்களில் அவ்வழியாக ரயில் ஒன்று கடந்து சென்றுள்ளது.
தற்கொலைக்கு முயன்றவர் ராஜசேகர் என கண்டறியப்பட்டுள்ளது. போலீசார் அவருக்கு என்ஜிஓ உதவியுடன் கவுன்சிலிங் கொடுத்துள்ளனர். தற்போது அவர் வீட்டாரிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளார்.