போலீசார் கல்லூரி முதல்வர்களுடன் மேற்கொண்ட ஆலோசனையில் 90 ரூட் தல யார் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் பச்சையப்பன் கல்லூரி, நியூ கல்லூரி, மாநில கல்லூரி ஆகிய மூன்று கல்லூரி முதல்வர்களுடனும் தமிழக காவல்துறை ஆலோசனை நடத்தியது. இந்த ஆலொசனை கூட்டத்தில் சென்னையில் 6 ரூட்டில் செல்லும் பேருந்துகளில் 90 ‘ரூட் தல’ இருக்கின்றனர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவர்களிடம் 6 மாதத்திற்கு எந்த தவறும் செய்யமாட்டேன் என உறுதி மொழி வாங்கவும் அவர்களின் பின்னால் இருந்து வேலை பார்க்கும் முன்னாள் மாணவர்களையும் கண்டுபிடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் அவர்களின் பெற்றோரை அழைத்து அறிவுரை வழங்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். மேலும் 3 கல்லூரிகளில் இருக்கும் மாணவர்களை பொதுமக்களுடன் நல்லுறவு மேற்கொள்ள அவர்களை டிராபிக் பணியில் ஈடுபடுத்தவும் காவல்துறை திட்டமிட்டுள்ளது.