குடும்ப பிரச்னை: மன உளைச்சலில் இருந்த தலைமைக் காவலர் எடுத்த விபரீத முடிவு

குடும்ப பிரச்னை: மன உளைச்சலில் இருந்த தலைமைக் காவலர் எடுத்த விபரீத முடிவு
குடும்ப பிரச்னை: மன உளைச்சலில் இருந்த தலைமைக் காவலர் எடுத்த விபரீத முடிவு
Published on

ஆவடியில் தலைமைக் காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். குடும்ப பிரச்னையால் ஏற்பட்ட மன உளைச்சலால் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

ஆவடி அருகே கோவில்பதாகை இந்திராகாந்தி நகர், கிருபா தெருவைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு (39). இவர், கொடுங்கையூர் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். திருநாவுக்கரசுக்கு குடிப் பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் வீட்டில் மனைவியுடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த 22ஆம் தேதி மனைவி இவருடன் சண்டையிட்டு புரசைவாக்கத்தில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இதில், மன உளைச்சலில் இருந்த திருநாவுக்கரசு வீட்டின் படுக்கை அறை பேனில் தனக்குத் தானே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த இவரது நண்பர் சுரேந்தர் என்பவர் ஆவடி டேங்க் பேக்டரி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

துகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர். குடும்ப பிரச்னை காரணமாக போலீஸ் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. தற்கொலை எண்ணம் இருப்பவர்கள், 104 எண்ணை தொடர்பு கொண்டால், அவர்களுக்கு உரிய மனநல ஆலோசனை வழங்கப்படும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com