மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினர் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மது பாட்டில்களை ஜேசிபி வாகனத்தைக் கொண்டு அழித்தனர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறை வாகன சோதனைகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, புதுச்சேரியிலிருந்து சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட மதுபான பாட்டில்களைப் பறிமுதல் செய்து சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்து வந்தனர். அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்படும் மதுபான பாட்டில்கள் திண்டிவனம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு குடோனில் அடுக்கி வைக்கப்பட்டு வந்தது.
ஆனால் தற்போது அடுக்கி வைக்கப்பட்டுள்ள குடோனில் மது பாட்டில்களின் எண்ணிக்கை அதிகரித்து, தற்போது பறிமுதல் செய்யப்படும் மதுபான பாட்டில்கள் வைக்க முடியாதச் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகப் பறிமுதல் செய்யப்பட்ட 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மது பாட்டில்களை திண்டிவனம் குற்றவியல் நீதிமன்ற நடுவர் நளினி தேவியின் முன்னிலையில் போலீசார் ஜேசிபி இயந்திரத்தைக் கொண்டு அழித்தனர்