லத்தியை வீசியதால் இளைஞர் மரணம் என புகார்.. காவலர் மீது வழக்குப்பதிவு..!

லத்தியை வீசியதால் இளைஞர் மரணம் என புகார்.. காவலர் மீது வழக்குப்பதிவு..!
லத்தியை வீசியதால் இளைஞர் மரணம் என புகார்.. காவலர் மீது வழக்குப்பதிவு..!
Published on

வாகன சோதனையின்போது நிற்காமல் சென்ற இருசக்கர வாகனம் மீது போலீசார் லத்தியை வீசியதால் இளைஞர் உயிரிழந்ததாக புகார் எழுந்தது. இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக தலைமைக் காவலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரையை சேர்ந்தவர் விவேகானந்த குமார். வயது 35. இவரது கடையில் வேலை செய்பவர் சரவணக்குமார். இருவரும் கடந்த 15-ஆம் தேதி வைகை ஆற்றுப் பாலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது வாகன சோதனைக்காக நின்றிருந்த போலீசார், இருவரும் சென்ற மோட்டார் சைக்கிளை மறித்துள்ளனர். ஆனால் இவர்கள் நிற்காமல் தொடர்ந்து சென்றுள்ளனர்.

இதனால் போலீசார் தாங்கள் வைத்திருந்த லத்தியை இருசக்க வாகனத்தின் மீது எறிந்ததாக கூறப்படுகிறது. இதனால் நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்துள்ளனர். இதனைடுத்து இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும் விவேகானந்த குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனையடுத்து விவேகானந்த குமார் உயிரிழப்புக்கு காரணமான காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினர்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வந்தனர். கிட்டத்தட்ட 2 நாட்களாக போராட்டம் நடந்த நிலையில் சோதனையில் இருந்த தலைமைக்காவலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மனித உயிர் மற்றும்  உடைமைகளுக்கு சேதம் விளைவிக்கும் வகையில் விபத்து ஏற்படுத்தியதாக 304 A  பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து மதுரை மாநகர போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com