போராட்டத்தில் ஈடுபட்ட கோவை சட்டக்கல்லூரி மாணவர்கள் 165 பேர் மீது வழக்குப்பதிவு

போராட்டத்தில் ஈடுபட்ட கோவை சட்டக்கல்லூரி மாணவர்கள் 165 பேர் மீது வழக்குப்பதிவு
போராட்டத்தில் ஈடுபட்ட கோவை சட்டக்கல்லூரி மாணவர்கள் 165 பேர் மீது வழக்குப்பதிவு
Published on

பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு கடும்‌ தண்டனை விதிக்கக்கோரி கோவையில் போராட்டத்தில் ஈடுபட்ட சட்டக்கல்லூரி மாணவர்கள் 165 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி பாலியல் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் போராட்டங்கள் நீடித்து வருகின்றன. பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் அனைவரையும்‌ கைது செய்ய வலியுறுத்தி மதுரையில் 10 க்கு மேற்பட்ட அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. போராட்‌டத்தில் பங்கேற்ற பெண்கள் அனை‌வரும் கண்களில்‌ கருப்புத் துணிக்கட்டி போராடினர். பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை கூறிய எஸ்பியை பணியிடமாற்றம் செய்யவும் வலியுறுத்தினர்.

இதே போல் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்ட கொடூர குற்றவாளிகளை நீதி முன் நிறுத்த உதகையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்‌றது. போராட்டத்துக்கு அனுமதி அளிக்கப்படாத நிலையில், 50 மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

உச்சநீதிமன்ற நீதிபதியின் தலைமையின் கீழ் விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கக்கோரி நாகர்கோவிலில் சி.ஐ.டி.யு சார்பில் உழைக்கும் பெண்கள் குழுவினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாலியல் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு தவுஹீத் ஜமாத்தின் அமைப்பு சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரத்துக்கு ‌மேற்பட்டோர் பங்கேற்று பாதிக்கப்பட்டோருக்கு நீதி வழங்க வேண்டும் என முழக்கமிட்டனர்.

இதே போல் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கக்கோரி போராட்டங்கள் நடைபெற்றன. இதனிடையே புதுக்கோட்டையில் நடைபெற்ற போராட்டத்தில் எஸ்பி ஒருவர் மாணவரை கன்னத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்நிலையில், பொள்ளாட்சி பாலியல் கொடூர சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு கடும்‌ தண்டனை விதிக்கக்கோரி கோவையில் போராட்டத்தில் ஈடுபட்ட சட்டக்கல்லூரி மாணவர்கள் 165 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com