காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததை கண்டித்து கடலூர் மாவட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது.
வகுப்புகளை புறக்கணித்த மாணவர்கள், உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்ப்படுத்தாக மத்திய அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு, தமிழகத்தை வஞ்சிப்பதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர். நியூட்ரினோ, ஸ்டெர்லைட், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களை தமிழகத்தில் தடை செய்ய வேண்டுமெனவும் மாணவர்கள் வலியுறுத்தினர்.
காவல்துறை எச்சரிக்கைக்குப்பிறகும் மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்ததால் அவர்கள் மீது காவல்துறையினர் லேசான தடியடி நடத்தினர். ஆயினும் மாணவர்கள் கலைந்து சென்றும், மீண்டும் ஒன்று சேர்ந்தும் போராட்டம் நடத்தினர். 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் கலந்து கொண்டனர்.