மணல் கொள்ளையை தடுத்த காவலர் மீது தாக்குதல்

மணல் கொள்ளையை தடுத்த காவலர் மீது தாக்குதல்
மணல் கொள்ளையை தடுத்த காவலர் மீது தாக்குதல்
Published on

கிருஷ்ணகிரியில் மணல் கொள்ளையை தடுக்க சென்ற வன காவலர் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் கோவள்ளி வனப்பகுதியில் டிராக்டர் மூலம் மணல் கொள்ளையடிக்கப்படுவதாக வன காவலர் முனியாண்டிக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து வன காவலர் முனியாண்டி மற்றும் சின்னசாமி ஆகிய இருவரும் சேர்ந்து கோவள்ளி வனப்பகுதிக்குள் ரோந்துப் பணிக்கு சென்றுள்ளனர். அப்போது மணல் கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட டிராக்டரை வனக்காவலர் முனியாண்டி மடக்கிய போது, மணல் கடத்தல் கும்பல் அவரை சரமாரியாக தாக்கியது. 

இதில் முனியாண்டி மயங்கி விழுந்ததையடுத்து, அந்த கும்பல் தப்பி ஓடியது. முனியாண்டியின் அலறல் சத்தம் கேட்டு, உடன் சென்ற சின்னசாமி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அங்கு வந்த அதிகாரிகள் முனியாண்டியை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தப்பி ஓடிய கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com