திருத்தணியிலிருந்து ஆந்திரா கடத்தமுயன்ற 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல் - 2 பேர் கைது

திருத்தணியிலிருந்து ஆந்திரா கடத்தமுயன்ற 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல் - 2 பேர் கைது
திருத்தணியிலிருந்து ஆந்திரா கடத்தமுயன்ற 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல் - 2 பேர் கைது
Published on
திருத்தணி அருகே ஆந்திராவிற்கு கடத்த முயன்ற 2 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 3 டன் ரேஷன் அரிசியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அருங்குளம் கூட்டுச்சாலை வழியாக ஆந்திர மாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடத்துவதாக திருவள்ளூர் மாவட்ட குடிமை பொருள் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, திருவள்ளூர் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் தடுப்பு குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சுந்தரம்மாள் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அதிவேகமாக ஆந்திர மாநிலத்தை நோக்கி வந்த சரக்கு வாகனத்தை போலீசார் சோதனையிட்டதில், அதில் மூன்று டன் ரேஷன் அரிசி கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. 
திருத்தணி சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி, ஆந்திராவில் அதிக விலைக்கு விற்க கடத்தி சென்றது தெரிந்தது. சரக்கு வாகனத்தில் அருங்குளம் மேட்டுத்தெரு பகுதியைச் சேர்ந்த சரவணன் (வயது 30), ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பலமநேரி பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் (வயது 52), ஆகிய இரண்டு பேரை கைதுசெய்த போலீசார், அரசி கடத்திய சரக்கு வாகனம் மற்றும் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் உறவினர்கள் எனவும், இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் உள்ள நிலையில் இவர்கள் தலைமறைவு குற்றவாளிகளாக இருந்துவந்தனர் எனவும் போலீசார் தெரிவித்தனர். மேலும் திருவள்ளூர் மாவட்ட உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com