வீட்டிற்குள் புகுந்த நாகப்பாம்பு - பிடிக்க முயன்ற வனக்காவலருக்கு ‘கையில் கடி’

வீட்டிற்குள் புகுந்த நாகப்பாம்பு - பிடிக்க முயன்ற வனக்காவலருக்கு ‘கையில் கடி’
வீட்டிற்குள் புகுந்த நாகப்பாம்பு - பிடிக்க முயன்ற வனக்காவலருக்கு ‘கையில் கடி’
Published on

வால்பாறையில் குடியிருப்பு பகுதியில் நுழைந்த நாகப்பாம்புவை பிடிக்க வந்த காவலரை பாம்பு கடித்தது.

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்டு வால்பாறை மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்கள் உள்ளன. இங்கு வீடுகளில் பாம்புகள் மற்றும் வனவிலங்குகள் புகுந்தால், அதை வனப்பாதுகாவலர்கள் பிடித்து மீண்டும் வனத்திற்குள் விடுவது வழக்கம். இந்நிலையில் நேற்று வால்பாறை வனப்பகுதிக்கு உட்பட்ட பாரலை எஸ்டேட் தோட்ட மேலாளர் குடியிருப்புக்குள் நாகப்பாம்பு ஒன்று புகுந்தது. அதனைப் பிடிக்க வேட்டை தடுப்பு காவலர்கள் ஆனந்த் என்பவருடைய தலைமையில் காவலர்கள் அங்கு சென்றனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக நாகப்பாம்பு ஆனந்த் கையில் கடித்தது. உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டனர். வலியில் துடித்த அவரை வால்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வனத்துறையினர் வனக்காவலர்களுக்கு பாம்புகளை பிடிப்பதற்கு பயிற்சி அளிக்கவில்லை என்றும், பாம்புகளை பிடிக்க போதுமான பாதுகாப்பு உபகரணங்களும் கொடுக்கவில்லை என்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், வேட்டை தடுப்பு காவலர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com