’இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம்...’ - திருக்குறளை மேற்கோள்காட்டி பிரதமர் மோடி உரை

’இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம்...’ - திருக்குறளை மேற்கோள்காட்டி பிரதமர் மோடி உரை
’இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம்...’ - திருக்குறளை மேற்கோள்காட்டி பிரதமர் மோடி உரை
Published on

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கிவைத்து பேசினார் பிரதமர் மோடி. நிகழ்ச்சியில் வணக்கம் என தமிழில் கூறி தனது உரையை தொடங்கினார்.

’இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு’ என்ற திருக்குறளை மேற்கோள்காட்டி பேசிய பிரதமர், ‘’சிறப்பான ஒரு தருணத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்தியாவிற்கு வந்துள்ளது. தமிழகத்திற்கும் சதுரங்க விளையாட்டிற்கும் நீண்ட வரலாற்று தொடர்பு உள்ளது. தமிழகத்திலிருந்து பல கிராண்ட் மாஸ்டர்கள் உருவாகியுள்ளனர். பல விளையாட்டுப் போட்டிகள் உலகத்தை ஒன்றிணைக்கின்றன. இந்தியாவின் விளையாட்டு கலாசாரம் மேம்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் பல்வேறு கோயில்கள் பல்வேறு விளையாட்டுகளை குறிக்கும் விதமாக அமைந்துள்ளது. கிராமங்கள், நகரங்களில் உள்ள நமது வீரர்கள் வெற்றிகளை ஈட்டும் காலகட்டம் இது. தமிழ்நாட்டின் கோயில்களிலுள்ள சிற்பங்கள் பல்வேறு விளையாட்டுகளை குறிக்கும் விதமாக அமைந்துள்ளது. துடிப்பான கலாசாரம் கொண்ட தமிழகம், தமிழ் மொழியின் தாயகமாகும்’’ என்று பேசினார்.

மாமல்லபுரத்தில் இன்றுமுதல் ஆகஸ்ட் 10ஆம் தேதிவரை செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறுகின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com