சென்னைக்கு வருவது எப்போதும் பிடிக்கும்: பிரதமர் மோடி

சென்னைக்கு வருவது எப்போதும் பிடிக்கும்: பிரதமர் மோடி

சென்னைக்கு வருவது எப்போதும் பிடிக்கும்: பிரதமர் மோடி
Published on

ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கைத் தூக்கி எறியுங்கள் என்று கூறினேன் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

ஐஐடி நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பிரதமர் மோடிக்கு பாஜக சார்பில் சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை பாஜக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், சி.பி ராதாகிருஷ்ணன், எச்.ராஜா உட்பட பலர் வரவேற்றனர். அப்போது விமான நிலையத்தில் கூடியிருந்த தொண்டர்கள் மத்தியில் அவர் பேசினார். 

அப்போது, சென்னைக்கு வருவது எப்போதும் எனக்குப் பிடிக்கும். இப்படியொரு வரவேற்பு அளித்த உங்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நான் அமெரிக்கா சென்று வந்திருக்கிறேன். அங்கு நான் பேசும்போது தமிழ்மொழி மிகவும் பழமையான மொழி என்று சொல்லியிருக்கிறேன். அதுதான் அங்குள்ள ஊடகங்களில் பேசப்பட்டு வருகிறது. நான் அமெரிக்காவில் பார்த்த விஷயம் என்ன்வென்றல், நம் நாடு மீது அவர்களுக்கு அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. 

மக்கள் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை நிறுத்தவேண்டும். ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கைத்தான் தூக்கி எறிய வேண்டும் என்று கூறினேன். அதனால் சங்கடங்கள் ஏற்படுகிறது. பிளாஸ்டிக் பயன்பாட்டையே நிறுத்த வேண்டும் என்று சொல்லவில்லை. காந்திஜியின் 150 வது பிறந்த நாளை ஒட்டி பாதயாத்திரை மேற்கொள்ள இருக்கிறோம். அதில் நமது சித்தாத்தங்களை மக்களிடம் தொண்டர்கள் எடுத்துச் சொல்ல வேண்டும்’’ என்றார். 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com