செய்தியாளர்: மணிகண்டபிரபு
பிரதமரின் வெறுப்பு பிரசாரம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மதுரை மாவட்ட தேர்தல் அலுவலர் வாயிலாக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.
“பிரதமர் மோடி, ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது பேசிய அவர், இந்திய நாட்டின் சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் பேசியதோடு, நாடெங்கும் விசமத்தனமான பொய்யை கூறி வருகிறார். பெரும்பான்மை இந்து வாக்குகளை குறி வைத்து பேசியுள்ள அவர், சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்பைத் தூண்டி, சமூக ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பிரச்சார மேடையில் உரையாற்றி வருகிறார்” என்று மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
இதனால், பிரதமர் மோடி மேல் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை குடிமைச் சமூக அமைப்புகள் ஒன்றாக இணைந்து மதுரை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான சங்கீதாவை சந்தித்து கோரிக்கை மனுவை இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்புமாறு வழங்கியுள்ளனர்.
இதனை மக்கள் சிவில் உரிமைக் கழகம் தமிழ்நாடு நாட்டைக் காப்போம், தமிழ்நாடு பொது மேடை, மக்கள் கண்காணிப்பகம் ஆகிய அமைப்பினரும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட குழுவினர் மதுரை மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்துள்ளனர்.