தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் திருப்பூர் மாவட்டம் தேர்ச்சி விகிதத்தில் முதலிடத்தை பிடித்துள்ளது.
தமிழகத்தில் பிளஸ்- 2 பொதுத்தேர்வில் 91.3 சதவிகித மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். பிளஸ்- 2 தேர்வில் 93.64 சதவிகித மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 88. 57 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் பிளஸ் -2 தேர்வில் மாணவர்களை விட 5.07 சதவிகித மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் 95.37 சதவிதம் பேர் தேர்ச்சி பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 95.23 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் 95.15 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்று மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. கோவை 95.01 சதவிகிதமும் நாமக்கல் 94.97 சதவிகிதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
1,281 பள்ளிகள் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளன. இதில் 238 அரசு பள்ளிகள் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளன. கணினி அறிவியல் பாடத்தில் 95.27 சதவிகிதம் பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.