பிளாஸ்டிக் தடை: துணி, பேப்பர் பைகளுக்கு மாறும் தமிழகம்!

பிளாஸ்டிக் தடை: துணி, பேப்பர் பைகளுக்கு மாறும் தமிழகம்!
பிளாஸ்டிக் தடை: துணி, பேப்பர் பைகளுக்கு மாறும் தமிழகம்!
Published on

ஜனவரி மாதம் 1 ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தமிழக அரசு தடை விதித்துள்ளதால் துணி மற்றும் பேப்பர் பைகளை கடைகளில் பயன்படுத்தத் தொடங்கி விட்டனர். 

தமிழ்நாடு அரசு, ஜனவரி மாதம் 1 ஆம் தேதி முதல் சில குறிப்பிட்ட வகை பிளாஸ்டிக் பொருட்களின் தயாரிப்பு மற்றும் உபயோகத்தை தடை செய்யும் பொருட்டு, அரசாணை வெளியிட்டுள்ளது. அந்த அரசாணையில், ஒருமுறை பயன்படுத்தி குப்பையில் போடப்படும் பிளாஸ்டிக் பொருட்களான தூக்கு பைகள், பிளாஸ்டிக் டம்ளர்கள், உறிஞ்சுக் குழாய்கள் போன்றவற்றை தயாரிக்கவும், சேமித்து வைக்கவும், விற்பனை செய்யவும் தடை விதிப்பதாகக் கூறப்பட்டுள்ளது. 

இதையடுத்து சென்னையில் சிறு கடைகளில் இருந்து டிபார்ட்மென்டல் ஸ்டோர்கள் வரை துணிப்பை மற்றும் பேப்பர் பைகளை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். 

‘சென்னையில் பெரும்பாலான சூப்பர் மார்க்கெட்டுகள் பிளாஸ்டிக் பைகளை கைவிட்டுவிட்டன. முதலில் பிளாஸ்டிக் பைகளுக்கு கட்டணம் வசூலித்தனர். இப்போது  வீட்டில் இருந்து பைகளை கொண்டு வருமாறு அறிவுறுத்துகின்றனர். அல்லது துணி பைகளை வழங்குகின்றனர். இதற்கு பத்து முதல் 20 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கின்றனர்’ என்று பொதுமக்கள் சிலர் கூறுகின்றனர்.

சென்னை நகரில் பெரும்பாலான கடைகளில் கேரிபேக் வழங்குவதை நிறுத்திவிட்டனர். சிறுகடைகளில் கூட பிளாஸ்டிக் பைகள் வழங்கப்படு வதில்லை. பேப்பர் பை வழங்கு கின்றனர். 

‘இப்போது வாடிக்கையாளர்களே துணி பைகளை கொண்டு வரத் தொடங்கிவிட்டனர். எங்கள் நிறுவனங்களில் பிளாஸ்டிக் பைகள் கொடுப்பதை நிறுத்திவிட்டு பேப்பர் பைகளை கொடுக்கத் தொடங்கி இருக்கிறோம். இப்போது முக்கால்வாசி பிளாஸ்டிக் பயன்பாட்டை கைவிட்டு விட்டோம் என்றாலும் டிசம்பர் 31 ஆம் தேதி முதல் முற்றிலுமாக விட்டு விடுவோம்’ என்கிறார் சென்னையின் பிரபல சூப்பர் மார்க்கெட் அதிகாரி ஒருவர். 

இதற்கிடையே, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் சேலம் பிளாஸ்டிக் வியாபாரிகள், தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் பிளாஸ்டிக் தடை பற்றிய ஆலோசனை கூட்டம் சேலத்தில் நேற்று நடந்தது. இதில், பிளாஸ்டிக் பொருட்கள் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து 3 நாட்கள் கடையடைப்பு போராட்டம் நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com