மயிலாடுதுறை மாவட்டம் டாக்டர் வரதாச்சாரியார் நகர பூங்காவில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், வனத்துறை மற்றும் புதிய தலைமுறை தொலைக்காட்சி சார்பாக சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. மாநில அளவில் நடைபெற்று வரும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்று, நெகிழி குறித்த விழிப்புணர்வு சுவர் ஓவியங்களை வரைந்து வருகின்றனர்.
இந்தப் போட்டியில் பங்கேற்ற கைகளை இழந்த மாற்றுத்திறனாளி மாணவி ஒருவர், கால்களைக் கொண்டு மஞ்சப்பை வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி அசத்தினார். “கைகள் இல்லாவிட்டால் என்ன..” என்று தனது தன்னம்பிக்கையால் தொடர்ந்து சாதிக்கத்துடிக்கும் இந்த மாணவி வரைந்த ஓவியம், பலரையும் கவர்ந்தது. போட்டி என்பதைத் தாண்டி, மாணவிக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.