மாணவர்களுக்கு கஞ்சா விற்பவர்கள் குறித்து புகார் அளிக்க தொலைபேசி எண்கள் வெளியீடு!

மாணவர்களுக்கு கஞ்சா விற்பவர்கள் குறித்து புகார் அளிக்க தொலைபேசி எண்கள் வெளியீடு!
மாணவர்களுக்கு கஞ்சா விற்பவர்கள் குறித்து புகார் அளிக்க தொலைபேசி எண்கள் வெளியீடு!
Published on

பள்ளி கல்லூரிகளில் ஊடுருவி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்பவர்கள் குறித்து புகார் அளிக்க ஐஜி அஸ்ரா கார்க் புகார் எண்களை வெளியிட்டுள்ளார்..

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பள்ளி, கல்லூரி மாணவர்களில் மாணவர்களை போன்று ஊடுருவி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனையில் ஈடுபடும் நபர்கள் குறித்து பள்ளி கல்லூரி நிர்வாகம், ஊழியர்கள் பெற்றோர்-ஆசிரியர் கழகத்தினர் அந்தந்த மாவட்ட அலைபேசி எண்களுக்கு புகார் அளிக்க வேண்டுமென தென் மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கார்க் அறிவுறுத்தியுள்ளார். மேலும், புகார் அளிப்பவர்களின் விவரம் ரகசியம் காக்கப்படும் எனவும் புகாரின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உத்தரவாதம் அளித்துள்ளார்.” என்று குறிப்பிடுள்ளார்.

தென் மண்டலத்திற்குட்பட்ட 10 மாவட்டங்களுக்கு தனித்தனியே புகார் அளிக்க அலைப்பேசி எண்கள் கொடுக்கபட்டுள்ளது. வரும் திங்கள் கிழமை முதல் இந்த எண்களில் புகார் அளிக்கலாம். காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த புகார் எண்களில் புகார் அளிக்கலாம்

மதுரை: 9498181206

விருதுநகர்: 9443967578

திண்டுக்கல்: 8525852544

தேனி: 9344014104

ராமநாதபுரம்: 8300031100

சிவகங்கை: 8608600100

நெல்லை: 9952740740

தென்காசி: 9385678039

தூத்துக்குடி: 9514144100

கன்னியாகுமரி: 7010363173

முன்னதாக கோவையில் பள்ளி, கல்லூரி வளாகங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போதைப் பொருட்கள் விற்பனை அல்லது அதன் உபயோகம் குறித்து தகவல் தெரிந்தும், காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்காமல் இருந்தால், சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர் அல்லது கல்லூரி முதல்வர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர போலீசார் எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com