பெட்ரோல் விலை நிர்ணயத்தில் நேற்று குளறுபடி ஏற்பட்ட சூழலில் இன்று 7 காசுகள் குறைந்து 81 ரூபாய் 35 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினசரி நிர்ணயித்து வருகின்றன.இந்நிலையில் கடந்த மாதம் சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தது. இதற்கு கர்நாடக தேர்தல் தான் காரணம் என சிலர் விமர்சித்து வந்த நிலையில் மே 14ஆம் தேதி முதல் மீண்டும் பெட்ரோல் டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்த்தப்பட்டது. தொடர்ந்து 16 நாட்களாக விலை தொடர்ந்து உயர்ந்துக்கொண்டே இருந்த நிலையில் பெட்ரோல் விலை இன்று 7 பைசாவும் மற்றும் டீசல் விலை 5 பைசாவும் குறைந்தது.
இதனைதொடர்ந்து ஒரு லிட்டர் பெட்ரோல் 7 காசு குறைந்து 81 ரூபாய் 35 காசிற்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் டீசல் 5 காசு விலை குறைந்து 73 ரூபாய் 12 காசிற்கு விற்பனையாகிறது. முன்னதாக, நேற்று பெட்ரோல் விலை 60 காசு குறைக்கப்பட்டதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்திருந்தது. ஆனால், சில மணி நேரம் கழித்து, பெட்ரோல் ஒரு லிட்டருக்கு ஒரு பைசா மட்டுமே குறைக்கப்பட்டுள்ளதாக அறிவித்தது. இதனால் ஏற்பட்ட குளறுபடி காரணமாக வாகன ஓட்டிகள் பெரும் சிறமத்திற்க்கு ஆளகிணார்.இத்னையெடுத்து தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தவறுதலாக அறிவிக்கப்பட்டதாக ஐஓசி விளக்கம் அளித்தது.
இதற்கிடையே கேரளாவில் நாளை முதல் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ஒரு ரூபாய் குறைக்கப்படும் என்றும் பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதால் இந்த விலை குறைப்பு நடவடிக்கையை அறிவித்துள்ளதாக கேரளா முதலமைச்சர் பிரனாயி விஜயன் தெரிவித்துள்ளார். மேலும், மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் எனவும் பிரனாயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.