பொம்மையார் பாளையத்தில் மயிலம் பொம்மபுர ஆதீனம் ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ள 380-ஏக்கர் தரிசு நிலங்களை மீட்டுத் தரக்கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
விழுப்புரம் மாவட்டம் பொம்மையார் எபாளையம் குயிலாப்பாளையம், பிள்ளைச்சாவடி ஆகிய மூன்று கிராமங்களில் 5000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள 380 ஏக்கர் தரிசு நிலத்தை மயிலம் பொம்மபுர ஆதீனம் தனது கட்டுப்பாட்டில் ஆக்கிரமித்து மடத்தின் பெயரில் வைத்துள்ளார் என கிராம மக்கள் புகார் கூறுகின்றனர்.
இதனால், பொம்மையார்பாளையம் பகுதியில் பல தலைமுறைகளாக வசிக்கக் கூடிய 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அரசின் வீடுகட்டும் திட்டம், இலவச கழிவறை திட்டங்களை பெறமுடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து தாங்கள் வசிக்க கூடிய பகுதிக்கு இலவச பட்டா வழங்க நடவடிக்கை எடுக்ககோரி கிராம மக்கள் இன்று ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
மேலும் பொம்மபுர ஆதீனம் இந்துசமய அறநிலைத்துறை அதிகாரிகளுடன் கைகோர்த்துக் கொண்டு 500க்கும் மேற்பட்ட வீடுகளை காலிசெய்ய கட்டாயப்படுத்துவதால் காலியிடங்களில் விளையாட்டு மைதானம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.