”காவல்துறைக்கே தெரியாத தகவல் அண்ணாமலைக்கு எப்படி தெரியும்?” - விசாரிக்கக் கோரி புதிய மனு

”காவல்துறைக்கே தெரியாத தகவல் அண்ணாமலைக்கு எப்படி தெரியும்?” - விசாரிக்கக் கோரி புதிய மனு
”காவல்துறைக்கே தெரியாத தகவல் அண்ணாமலைக்கு எப்படி தெரியும்?” - விசாரிக்கக் கோரி புதிய மனு
Published on

கோவையில் கார் வெடிப்பு சம்பவத்தில் காவல்துறைக்கே தெரியாத தகவல்கள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையிடம் இருப்பதால், அவரிடம் காவல்துறை விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று கோவையில் திராவிடர் விடுதலைக் கழகம், மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளது.

கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் மதக்கலவரத்தை தூண்டும் பாஜக தலைவர் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. கோவை கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே கடந்த 23-ம் தேதி கார் வெடி விபத்து நடந்தது தொடர்பாக கருத்து தெரிவிப்பதாக, மதக்கலவரத்தை தூண்டும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வரும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என வலியுறுத்தி திராவிடர் விடுதலை கழகத்தினர் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.

மேலும் இந்தப் புகாரில் கோவை மாநகர காவல்துறை வெடி விபத்து தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் எனவும், இந்த வெடி விபத்து சம்பவத்தை வைத்து பாஜக தலைவர் அண்ணாமலை விஷமத்தனமான பிரச்சாரம் செய்து வருகிறார் எனவும் புகாராக குறிப்பிட்டிருந்தனர்.

இதைத் தொடர்ந்து திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாநகர செயலாளர் நிர்மல் குமார் கூறும் பொழுது. “வரும் நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து அண்ணாமலை மதக் கலவரம் செய்து அரசியல் செய்ய பார்க்கிறார். இப்படி வெடி விபத்து தொடர்பாக சாதாரண நபர் பேசி இருந்தால், போலீசார் அவரை விசாரணை, கைது என்று நடவடிக்கை மேற்கொண்டு இருப்பார்கள். ஆகவே தமிழக அரசு அண்ணாமலையை விசாரணை செய்ய வேண்டும். காவல்துறைக்கே தெரியாத தகவல்கள் தன்னிடம் இருப்பதாக தெரிவிக்கிறார் அண்ணாமலை. இப்படி தகவல் தெரிந்தே காவல்துறைக்கு தெரிவிக்காமல் இருப்பதற்கே முதலில் அவரை கைது செய்ய வேண்டும்” என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com