கோடநாடு விவகாரம்: இபிஎஸ், சசிகலாவை விசாரிக்க புதிய மனு

கோடநாடு விவகாரம்: இபிஎஸ், சசிகலாவை விசாரிக்க புதிய மனு
கோடநாடு விவகாரம்:  இபிஎஸ், சசிகலாவை விசாரிக்க புதிய மனு
Published on

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா உள்ளிட்டோரை விசாரிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அவர் வாழ்ந்த கோடநாட்டு வீட்டில் 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் அரங்கேறின. நள்ளிரவில் பங்களாவுக்குள் புகுந்த கொள்ளையர்கள் எஸ்டேட் காவலாளி ஓம் பகதூரை கொடூரமாக கொலை செய்யப்பட்டு ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக வழக்கு பதிவானதின்பேரில் நீலகிரி அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்செய்து விசாரணை நடைபெற்று வரும் இந்தவேளையில், முன்னாள் முதல்வர் பழனிசாமி, சசிகலா, இளவரசி, சுதாகரன், நீலகிரி முன்னாள் ஆட்சியர் சங்கர், முன்னாள் எஸ்பி முரளி ரம்பா, அதிமுக நிர்வாகி சஜீவன், கோடநாடு எஸ்டேட்டின் மேலாளர் நடராஜன், சுனில் ஆகியோரையும் விசாரிக்கவேண்டும் என வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள தீபு, சதீசன், சந்தோஷ்சாமி ஆகியோர் நீலகிரி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். ஆனால் இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் நடராஜனை விசாரிக்க மட்டும் அனுமதி வழங்கி, மற்றவர்களை விசாரிக்கமுடியாது என்று கூறியது.


இதனை எதிர்த்து தீபு, சதீசன், சந்தோஷ்சாமி ஆகிய மூவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்திருக்கின்றனர். அதில் நீலகிரி நீதிமன்ற உத்தரவை மறு ஆய்வு செய்யவேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனர். மேலும், முன்னதாக எடப்பாடி பழனிசாமி குறித்து சயான் பேசியுள்ள நிலையில் அதன் தீவிரத்தை பரிசீலிக்க நீலகிரி நீதிமன்றம் தவறிவிட்டதாகவும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com