அம்பத்தூர்: வீட்டுக்குள் நுழைந்த பாம்பு - தடுக்க முயன்று கடிபட்டு உயிரிழந்த வளர்ப்பு நாய்!

அம்பத்தூர்: வீட்டுக்குள் நுழைந்த பாம்பு - தடுக்க முயன்று கடிபட்டு உயிரிழந்த வளர்ப்பு நாய்!
அம்பத்தூர்: வீட்டுக்குள் நுழைந்த பாம்பு - தடுக்க முயன்று கடிபட்டு உயிரிழந்த வளர்ப்பு நாய்!
Published on

அம்பத்தூர் அருகே வீட்டு வளாகத்தில் நுழைந்த விஷப்பாம்பை வீட்டிற்குள் நுழையவிடாமல் போராடிய வளர்ப்பு நாய் கடிபட்டு உயிரை மாய்த்துக்கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை அம்பத்தூர் கலைவாணன் நகரைச் சேர்ந்தவர் தமிழ். இவரது வீட்டில் சிறு குட்டியிலிருந்து வளர்க்கப்பட்டு வந்த லேப் இனத்தைச் சேர்ந்த நாய் இன்று வழக்கம்போல் அவரது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்பொழுது திடீரென வீட்டு வளாகத்திற்குள் புகுந்த மூன்றடி நல்லபாம்பை கண்ட நாய், பாம்பினை வீட்டிற்குள் நுழையவிடாமல் தடுத்து நிறுத்த முற்பட்டது.

அப்போது விஷப்பாம்பு நாயை கடித்தது. நாயின் அலறல் சத்தத்தை கேட்டு வீட்டு உரிமையாளர்கள் வெளியே வந்து பார்த்தபோது, பாம்பு அவர்கள் வீட்டில் இருந்த இருசக்கர வாகனத்தில் மறைந்து கொண்டது. வீட்டின் உரிமையாளர் தேடி பார்த்தபோது, மயக்க நிலையில் கிடந்த நாயை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இருந்தபோதிலும் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிர் பிரிந்தது.

இதற்கிடையே இருசக்கர வாகனத்தில் புகுந்துகொண்ட 3 அடி நீளம் உள்ள நல்ல பாம்பு குறித்து வீட்டின் உரிமையாளர் அம்பத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதனையடுத்து அங்கு விரைந்துவந்த தீயணைப்பு துறையினர் என்ஃபீல்ட் இருசக்கர வாகனத்தில் மறைந்திருந்த நல்ல பாம்பை லாவகமாக பிடித்து பாதுகாப்பாக வனப்பகுதியில் விட்டனர். தனது முதலாளி வீட்டில் விஷப்பாம்பு நுழைந்து விடக்கூடாது என போராடி தன்னுயிரை மாய்த்துக்கொண்ட வளர்ப்பு நாயின் போராட்ட செயல் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com