புதுக்கோட்டை | பள்ளி ஆசிரியர்கள் கூண்டோடு பணி மாற்றம்... பரிதவிக்கும் மாணவர்கள்

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே ஒரு அரசு நடுநிலைப்பள்ளியில் பணியாற்றிய தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்கள் அனைவரும் கூண்டோடு பணி மாறுதல் பெற்று சென்றுவிட்டனர். இதனால் அங்கு பயின்ற மாணவர்கள் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள்.
புதுக்கோட்டை அரசுப்பள்ளி
புதுக்கோட்டை அரசுப்பள்ளிபுதிய தலைமுறை
Published on

செய்தியாளர் - சுப.முத்துப்பழம்பதி

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே ஒரு அரசு நடுநிலைப்பள்ளியில் பணியாற்றிய தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்கள் அனைவரும் கூண்டோடு பணி மாறுதல் பெற்று சென்று விட்டதால் அங்கு பயின்று வரும் மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகி உள்ளது. இந்நிலையில் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் கல்வித்துறையும் தடுமாறி வருகிறது.

பத்தாண்டு காலம் தங்கள் பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர்கள் ஒட்டுமொத்தமாக வெளியேறி விட்டதால் பெற்றோர்களும் கண்ணீரில் தவிக்கின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ள காசிம் புதுப்பேட்டை அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 111 மாணவிகள் பயின்று வருகின்றனர்.

புதுப்பேட்டை அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவன்
புதுப்பேட்டை அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவன்

இவர்களுக்காக ஏழு ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டிய இப்பள்ளியில் தற்போது நிரந்தர அரசு ஆசிரியர்கள் என்று யாருமே இல்லாமல் இரண்டு தற்காலிக ஆசிரியர்கள் மட்டுமே பணியில் உள்ளனர்.

காரணம் இந்த பள்ளியில் பணியாற்றி வந்த தலைமையாசிரியர் உள்ளிட்ட நிரந்தர ஆசிரியர்கள் ஏழு பேரும் பணி மாறுதல் பெற்று வேறு வேறு பள்ளிகளுக்கு சென்று விட்டனர். அதனால் நிற்கதியாய் நிற்கின்றனர் மாணவர்கள்.

புதுக்கோட்டை அரசுப்பள்ளி
ராஜஸ்தான்: பள்ளியில் சட்டென மயங்கி விழுந்த சிறுவன்.. துடிப்பதை நிறுத்திய இதயம்! ஷாக்கான CCTV வீடியோ!

இன்று மாணவர்களே பள்ளிக்கு வந்து பள்ளியை திறந்து அரசு ஆசிரியர்கள் யாரும் இல்லாத நிலையில் இரண்டு தற்காலிக ஆசிரியர்களின் கண்காணிப்பில் பள்ளி வகுப்பறையில் அமர்ந்துள்ளனர். இதனால் மாணவர்களின் கல்வியும் பாதுகாப்பும் கேள்விக்குறியாக உள்ள நிலையில் அடுத்து கல்வித்துறை என்ன செய்யப்போகிறது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

புதுப்பேட்டை அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி
புதுப்பேட்டை அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி

இதுகுறித்து அந்த கிராமத்தைச் சேர்ந்த பெற்றோர்கள் கூறுகையில், “கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக எங்கள் பள்ளியில் பணியாற்றி வந்த ஆசிரியர்கள் ஒரே நேரத்தில் பணி மாறுதல் பெற்று சென்று இருப்பது எங்களுக்கு வேதனை அளிக்கிறது. மாணவர்களின் நலனில் அக்கறை கொள்ளாமல் அவர்கள் ஒரே நேரத்தில் வேறு வேறு பள்ளிகளுக்கு சென்று விட்டனர்.

இதனால் மாணவர்களுக்கு முறையான கல்வி அளிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இனி எவ்வாறு இந்த குழந்தைகள் கல்வி பெறப் போகிறார்கள்? அவர்களின் பாதுகாப்பு என்ன ஆகிப்போகிறது என்ற அச்சம் எங்களுக்கு எழுந்துள்ளது” என்று கண்ணீர் மல்க பேசி தங்களது வேதனையை வெளிப்படுத்தி உள்ளனர்.

மேலும் “கல்வித்துறையும் மாவட்ட நிர்வாகமும் இந்த விவகாரத்தில் தலையிட்டு உடனடியாக நிரந்தர ஆசிரியர்களை இந்த பள்ளியில் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை அரசுப்பள்ளி
ஆதிச்சநல்லூர் | ஜூன், ஜூலைகளில் கூட்டம் கூட்டமாக வட்டமடிக்கும் கழுகுகள்... வரலாற்று பின்னணி இதுதான்!

இதுகுறித்து ஆசிரியர்கள் தரப்பில் கேட்டபோது,

இந்த கிராமத்தில் உள்ள பள்ளி மேலாண்மை கல்வி குழு மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் ஆசிரியர்களுக்கு கூடுதல் நெருக்கடி கொடுத்ததால்தான் ஒட்டுமொத்தமாக ஆசிரியர்கள் வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. ஆசிரியர்களை சுதந்திரமாக பணியாற்ற சில பெற்றோரும் ஆசிரியர் சங்க நிர்வாகிகளும் விடவில்லை. அதன் காரணமாகவே ஒட்டுமொத்தமாக எல்லா ஆசிரியர்களும் அங்கிருந்து சென்றுவிட்டனர்” என தெரிவித்தனர்.

இது ஆசிரியர்களின் குற்றச்சாட்டாக இருக்கும் நிலையில் மாணவர்கள் பரிதவிக்கும் சூழலில் இதுகுறித்து மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் சண்முகத்திடம் கேட்டபோது,

ஆசிரியர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் பணி மாறுதலை சென்றிருப்பது அவர்களின் விருப்பம். அதை நாம் ஒன்றும் செய்ய முடியாது. அதே வேளையில் காசிம்புதுப்பேட்டை பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளின் நலனை தரத்தில் கொண்டு உடனடியாக நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்” என தெரிவித்தார்.

ஏழு நிரந்தர ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டிய பள்ளியில் ஒரு நிரந்தர ஆசிரியர் கூட இல்லாமல் போயுள்ளது. இது மாணவர்களின் கல்வியையும் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கி உள்ள சூழலில் விரைந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அங்கு ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்பதை அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com