முனிசேகர் மனசாட்சிப்படி உண்மையை கூறவேண்டும்: பெரியபாண்டியன் மனைவி

முனிசேகர் மனசாட்சிப்படி உண்மையை கூறவேண்டும்: பெரியபாண்டியன் மனைவி
முனிசேகர் மனசாட்சிப்படி உண்மையை கூறவேண்டும்: பெரியபாண்டியன் மனைவி
Published on

தன் கணவர் கொல்லப்பட்ட சம்பவத்தில் உடனிருந்த காவல் ஆய்வாளர் முனிசேகர் மனசாட்சிப்படி உண்மையை கூற என பெரியபாண்டியன் மனைவி கேட்டுக்கொண்டுள்ளார்.

காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக மற்றொரு ஆய்வாளர் முனிசேகர் மீது ராஜஸ்தான் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கொள்ளையர்களை பிடிக்க முயன்றபோது முனிசேகர் தவறுதலாக சுட்டத்தில் பெரியபாண்டியன் உயிரிழந்துவிட்டதாக பாலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் பார்கவ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக புதிய தலைமுறையிடம் பேசிய பெரிய பாண்டியன் மனைவி பானுரேகா, “எனது கணவர் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக நிறைய பேரை பிடித்துள்ளதாக கூறுகின்றனர். ராஜஸ்தானில் இருந்து தற்போது தான் அதிகாரிகள் பலர் வந்துள்ளனர். எனவே பிடிபட்டுள்ளவர்களிடம் விசாரணை மேற்கொண்டு உண்மை என்ன என்பதை காவல் ஆணையர் விஸ்வநாதனும், தமிழக அரசும் தான் வெளிக்கொண்டுவர வேண்டும். இது எனது கோரிக்கை, எனது மகன் கோரிக்கை மட்டுமின்றி ஒட்டு மொத்த தமிழர்களின் கோரிக்கையாக முன்வைக்கிறேன்” என்றார்.

மேலும், “முனிசேகர் குறித்து இதுவரை என் கணவர் எதுவுமே தவறாக கூறியதில்லை. அவர் நல்ல நண்பர் என்றுதான் கூறியிருக்கிறார். தனது பணிக்கு உறுதுணையாக இருப்பார் என்றுதான் முனிசேகரை ராஜஸ்தானுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அதனால் அதுகுறித்து என்னால் சரியான கருத்தை தெரிவிக்க முடியவில்லை. முனிசேகர்தான் மனசாட்சிப்படி என்ன நடந்தது என்பதை தெரியப்படுத்த வேண்டும். ஒரு போலீஸாக முனிசேகர் நடந்த உண்மையை கூறுவார் என்று நம்புகிறேன். விசாரணை நடைபெற்ற பின்னர் எந்த முடிவு எடுக்கப்பட்டாலும் நான் மீண்டும் காவல் ஆணையரை சந்திப்பேன்” என்றும் பானுரேகா கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com