பெரணமல்லூர் இடைத்தேர்தல் To விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வரை.. பாமகவின் 35 ஆண்டுகால தேர்தல் வரலாறு!

பெரணமல்லூர் டூ விக்கிரவாண்டி 35 ஆண்டுகால பாமக தேர்தல் வரலாறு என்ன என்பதை தெரிந்துக்கொள்ளலாம்.
பாமக
பாமகputhiyathalaimurai
Published on

மருத்துவர் ராமதாஸால் தொடங்கப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சி இன்று தனது 36-வது ஆண்டில் அடியெடித்து வைக்கிறது. அந்தக் கட்சியின் தேர்தல் பயணம் குறித்துப் பார்ப்போம்..,

பிற்படுத்தப்பட்ட வன்னிய சமூக மக்களின் இட ஒதுக்கீடு உள்ளிட்ட உரிமைகளுக்காகத் தொடங்கப்பட்டதுதான் வன்னியர் சங்கம்...அதன் தொடர்ச்சியாக, 1989-ம் ஆண்டு இதே நாளில், சென்னை கடற்கரை சீரணி அரங்கில் 10 லட்சம் மக்கள் புடைசூழ பாட்டாளி மக்கள் கட்சியைத் தோற்றுவித்தார் மருத்துவர் ராமதாஸ்.

மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலின மக்கள், மதச்சிறுபான்மையோர் ஆகியோரை பிரதிநிதித்துவப் படுத்தும் வகையில் தங்களின் கட்சிக் கொடி, கொள்கை, நிர்வாகிகள் நியமனம் உள்ளிட்ட விஷயங்களை வடிவமைத்தார் மருத்துவர் ராமதாஸ். மார்க்ஸ், அம்பேத்கர், பெரியார் ஆகியோரை தங்களின் வழிகாட்டிகளாகவும் அறிவித்தார். பாமக தொடங்கப்பட்ட காலத்தில் தமிழகத்தின் சமூக மாற்றத்தை விரும்பும் பலர் அந்தக் கட்சியை மிகத் தீவிரமாக ஆதரித்தனர்...பாமகவின் இதழான தமிழ் ஓசையில் கட்டுரைகளை ஏழுதினர்...

பாமக
அமுதா ஐஏஎஸ் உட்பட 15 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம்!

பாமகவின் தேர்தல் பயணம் என்று பார்த்தால். கட்சி தொடங்கிய ஆறு மாதத்துக்குள், அப்போதைய வேலூர் மாவட்டத்தில் உள்ள பெரணமல்லூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டது பாட்டாளி மக்கள் கட்சி. அந்தத் தேர்தலில், வெற்றி பெறாவிட்டாலும் 22,000 வாக்குகளைப் பெற்றது. 1989 நாடாளுமன்றத் தேர்தலில், எந்தக் கட்சியுடனும் கூட்டணி இல்லாமல் 33 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்டு, ஆறு சதவிகித வாக்குகளைப் பெற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அதன்பிறகு 1991 தேர்தலிலும் இஸ்லாமிய, தமிழ்த் தேசிய, அம்பேத்கரிய அமைப்புகளை இணைத்து ஒரு புதிய கூட்டணியை உருவாக்கினார் மருத்துவர் ராமதாஸ்.

199 தொகுதிகளில் போட்டியிட்டது பா.ம.க. ஆனால், அந்தத் தேர்தலில், பா.ம.க-வின் சார்பாகப் போட்டியிட்ட பண்ருட்டி ராமச்சந்தின் மட்டுமே வெற்றுபெற்றார். ஆனால், அந்தத் தேர்தலிலும் ஆறு சதவ்கித வாக்குகளைப் பெற்று அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது . அடுத்த வந்த 1996 சட்டமன்றத் தேர்தலில், தி.மு.க-வுடன் கூட்டணிக்குச் செல்ல முடிவெடுத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், தொகுதிப் பங்கீட்டில் சிக்கல் எழ, பின் வாழப்பாடி ராமமூர்த்தியின் திவாரி காங்கிரஸ் மற்றும் 12 சிறிய கட்சிகளுடன் இணைந்து, 116 தொகுதியில் போட்டியிட்டு நான்கு தொகுதியில் வெற்றி பெற்றது பா.ம.க. மீண்டும் ஆறு சதவிகித வாக்குகளைப் பெற்றது.

தமிழகத்தில் ஒரு கட்சி தொடங்கப்பட்டு மூன்று தேர்தலில், பிரதான இருபெரும் திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லாமல் ஆறு சதவிகித வாக்குகளைப் பெற்றது பா.ம.க-வின் மீது அனைவரின் கவனத்தையும் திருப்பியது. பின்னர், 98-ல் அதிமுகவுடன் கூட்டணி. 5 தொகுதியில் போட்டியிட்டு 4 -ல் வெற்றி பெற்றது. தங்கள் கட்சிக்குக் கிடைத்த முதல் மந்திரி பதவியை பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த தலித் எழில்மலைக்குக் கொடுத்தார் மருத்துவர் ராமதாஸ். பிறகு, 1999 நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணியில் இருந்து விலகிக்கொள்ள, தி,மு,க-வுடன் கூட்டணி சேரும் வாய்ப்பு உருவானது. அப்போது, ஏழு தொகுதியில் போட்டியிட்டு, ஐந்து தொகுதிகளில் வெற்றிபெற்று, வாஜ்பாய் தலைமையிலான மத்திய மந்திரி சபையிலும் இடம் பெற்றது பா.ம.க.

பாமக
“பொதுப் பட்டியலில் உள்ள கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற மத்திய அரசு தயாரா?” - முதல்வர் ஸ்டாலின்

பிறகு 2001 சட்டமன்றத் தேர்தலில், அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்து 20 இடங்களில் வெற்றி, 2004 நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணியில் போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி என ஏறுமுகத்தையும், 2009 நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வி. பிறகு 2014 நாடாளுமன்றத் தேர்தலில் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர்ந்து, போட்டியிட்டு ஒரு இடத்தில் மட்டும் (அன்புமணி) வெற்றி என இறங்கு முகத்தையும் சந்தித்தது பா.ம.க.

பிறகு, 2016 சட்டமன்றத் தேர்தலில், இரண்டு திராவிடக் கட்சிகளுடனும் கூட்டணி இல்லை என அறிவித்து தனித்துக் களம் இறங்கியது பா.ம.க. அந்தக் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால், அந்தத் தேர்தலில் ஒரு இடத்தில்கூட பா.ம.க-வுக்கு வெற்றி கிடைக்கவில்லை. 2014 நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து போட்டியிட்டது பா.ம.க. தர்மபுரியில் போட்டியிட்ட மருத்துவர் அன்புமணி மட்டும் வெற்றிபெற்றார். பிறகு, 2016 தேர்தலில், திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி வைக்காமல், தனித்துப் போட்டியிடுவோம் என அறிவித்து அதேபோல போட்டியிட்டபோது பா.ம.க. அப்போது ஒரு இடத்தில் கூட வெற்றிபெற முடியவில்லை என்றாலும், 5.36 சதவிகித சதவிகித வாக்கையும் பா.ம.கவின் மீது மக்கள் மத்தியில் சிறிதளவு நம்பிக்கையும் ஏற்பட்டது.

NGMPC22 - 147

ஆனால், மீண்டும், 2019 நாடாளுமன்றத் தேர்தலில், அ.தி.மு.க, பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்தது பா.ம.கவின் மீது மிகப்பெரிய விமர்சனத்தை உண்டாக்கியது...அந்தத் தேர்தலில் ஒரு இடத்தில்கூட வெற்றிபெறவும் முடியவில்லை...தொடர்ந்து, 2021 தேர்தலில், அதே கூட்டணியில், 23 இடங்களில் போட்டியிட்டு, 5 இடங்களில் வெற்றிபெற்றது...தொடர்ந்து, 2024 நாடாளுமன்றத் தேர்தலில், அதிமுக அல்லாத தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பத்து இடங்களில் போட்டியிட்டு ஒரு இடத்தில்கூட வெற்றிபெற முடியவில்லை. 4.4 வாக்கு சதவிகிதத்தைப் பெற்று மாநிலக் கட்சி அந்தஸ்தையும் இழந்தது..,தொடர்ந்து நடைபெற்ற விக்கிரவாண்டி இடைத்தேர்தலில், அதிமுக போட்டியிடவில்லை என ஒதுங்கிக்கொண்ட நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பாக, பாமக தேர்தலை எதிர்கொண்டது.., பாமக சார்பில் போட்டியிட்ட அன்புமணி 56,296 வாக்குகளைப் பெற்றார்..,திமுக வேட்பாளரிடம், 67,757 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார்...

பாமக
”பட்டம் பெறுவதால் பயனில்லை; பஞ்சர் கடை வைக்கலாம்” - மாணவர்களுக்கு அறிவுரை கூறிய பாஜக எம்.எல்.ஏ.!

கட்சி ஆரம்பித்து, 89,91,96 என முதல் மூன்று பொதுத் தேர்தலில், ஆறு சதவிகித வாக்குகளையும் கணிசமான வெற்றியையும் பதிவு செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்த பாமக, அடுத்து வந்த,1998,1999,2001,2006 நான்கு தேர்தலில் நல்ல வெற்றியைப் பதிவு செய்து உச்சத்துக்குச் சென்றது...அடுத்து வந்த தேர்தல்களில் தொடர்ந்து பின்னடைவுகளைச் சந்தித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது..,இனி வரும் காலங்களிலாவது மீளுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..,

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com