பெரம்பலூர் | குப்பையோடு குப்பையாக கிடந்த தங்க செயின் - உரியவரிடம் ஒப்படைத்த தூய்மை பணியாளர்கள்!

பெரம்பலூரில் குப்பைகளை சேகரித்தபோது குப்பையோடு குப்பையாக கிடந்த 1 சவரன் தங்க செயினை உரியவரிடம் ஒப்படைத்த தூய்மை பணியாளர்களின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்க செயின் - உரியவரிடம் ஒப்படைத்த தூய்மை பணியாளர்கள்
தங்க செயின் - உரியவரிடம் ஒப்படைத்த தூய்மை பணியாளர்கள்pt desk
Published on

செய்தியாளர்: அச்சுதராஜகோபால்

பெரம்பலூர் நகராட்சி தூய்மை பணியாளர்கள் பழைய பேருந்து நிலையம் பகுதியில் இன்று அதிகாலை முதல் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்தனர். நேற்று ஆயுத பூஜை என்பதால் அதிக குப்பைகள் கிடந்ததால் ஒவ்வொரு இடத்திலும் நின்று குப்பைகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அம்பேத்கர் சிலை அருகே தள்ளுவண்டியில் பிரியாணி கடை நடத்தி வரும் சுகந்தி என்பவர் தனது கடையில் இருந்த குப்பை கழிவுகளை தூய்மை பணியாளர்களிடம் கொடுத்துள்ளார்.

தங்க செயின் - உரியவரிடம் ஒப்படைத்த தூய்மை பணியாளர்கள்
தங்க செயின் - உரியவரிடம் ஒப்படைத்த தூய்மை பணியாளர்கள்pt desk

அப்போது எதிர்பாராத விதமாக அவர் கழுத்தில் அணிந்திருந்த 1 சவரன் தங்க செயினை குப்பையுடன் தவறிவிட்டுள்ளார்.

பின்னர், தூய்மை பணியாளர்கள் கழிவுகளை பிரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, அதில் தங்க செயின் இருந்தது தெரியவந்துள்ளது . இதனையடுத்து உரியவரை அறிந்த தூய்மை பணியாளர்கள், சுகந்தியிடம் தங்க செயினை ஒப்படைத்தனர். தங்க செயினை பெற்றுக் கொண்ட சுகந்தி, தூய்மை பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

தங்க செயின் - உரியவரிடம் ஒப்படைத்த தூய்மை பணியாளர்கள்
திருச்சி: பத்திரமாக தரையிறக்கப்பட்ட விமானம் - வெளியே வந்த பயணிகளை ஆரத்தழுவி வரவேற்ற உறவினர்கள்

இதைத் தொடர்ந்து தவறிவிட்ட தங்க செயினை உரியவரிடம் ஒப்படைத்த தூய்மை பணியாளர்களான மாரிமுத்து, ஜெகநாதன், தர்மலிங்கம், பொன்ராஜ், கவிதா ஆகியோரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com