திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த திண்ணனூர் ஏரியை கிராம மக்கள், நாட்டு நலதிட்ட மாணவர்கள், தன்னார்வலர்கள் முன் வந்து ஏரியை தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர்.
திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த திண்ணனூரில் உள்ள ஏரிக்கு, நீர்வரத்து பாதைகள் தூர்வாரபடாமலும், ஏரி தூர்ந்து மேடாகி உள்ளதாலும், ஏரியில் தண்ணீர் இல்லாததால், இக்கிராமத்தில் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் பரிதவித்தனர். இக்கிராம பொதுமக்கள் ஒன்று சேர்ந்து தாங்களாகவே ஏரியை தூர்வார அனுமதிகோரி மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பித்தனர்.
மாவட்ட ஆட்சியர் உத்திரவின்பேரில் கோட்டாச்சியர் ராஜ்குமார் தூர்வரும் பணியை தொடக்கிவைத்தார். பொக்கலைன் இயந்திரம் கொண்டு தூர்வாரினர். தன்னார்வலர்கள் நாட்டுநலப்பணி திட்ட மாணவர்கள், பொதுமக்கள் என 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு இயந்திரம் கொண்டு அள்ளப்பட்ட மண்னை வரிசையாக நின்று தட்டுகளில் ஏந்திசென்று கரையோரம்கொட்டி கரைகளை பலப்படுத்தினர்.