கூடுதலாக மின் கட்டணம் செலுத்த வேண்டியிருப்பது ஏன்?: தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் பதில்

கூடுதலாக மின் கட்டணம் செலுத்த வேண்டியிருப்பது ஏன்?: தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் பதில்
கூடுதலாக மின் கட்டணம் செலுத்த வேண்டியிருப்பது ஏன்?:  தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் பதில்
Published on

ஊரடங்கு காரணமாக மக்கள் 18-20 மணி நேரம் வீட்டில் இருப்பதால் கூடுதலாக மின் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது என தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அத்தியாவசியத் தேவைகளைத் தவிர பிற அனைத்துச் சேவைகளும் முடக்கப்பட்டதால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கினர். இதனால் அவர்களின் பெருவாரியான நேரமானது வீட்டிலேயே கழிந்து வருகிறது. இதன் காரணமாக அவர்களின் மின்சார பயன்பாடும் முன்பை விட அதிகரித்துள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக மக்கள் 18-20 மணி நேரம் வீட்டில் இருப்பதால் கூடுதலாக மின் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது என தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. முன்னதாக  பிரபலங்கள் உட்பட பொதுமக்கள் பலரும் ஊரடங்கு காலத்தில் தங்களது வீடுகளுக்கு மின்வாரியம் அதிக அளவு மின்கட்டணம் வசூலிப்பதாக குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com