சமீபகாலமாக அதிகரித்து வரும் தங்கத்தின் விலையானது கடந்தவாரம் ஓரளவு குறையத் தொடங்கியது. இதனால் நகைப்பிரியர்கள் தங்கத்தின் மேல் முறையீடு செய்வது அதிகரித்த நிலையில், மீண்டும் தங்கத்தின் விலை சற்றே உயர்வு கண்டது.
இந்நிலையில், அட்சயதிருதியை முன்னிட்டு நேற்று தங்கத்தின் விலை ஒரே நாளில் மூன்று முறை உயர்ந்து ஒரு சவரன் ரூ.54160-க்கு விற்பனையானது. இருப்பினும் அட்சயதிருதியன்று ஒரு கிராம் தங்கமாவது வாங்கவேண்டும் என நினைத்த நகைப்பிரியர்கள் தங்க நகைக் கடைகளில் கூடினர்.
அதன்படி, அட்சயதிருதியில் மட்டும் தமிழ்நாடு முழுவதும் உள்ள நகைக்கடையில் கிட்டத்தட்ட ரூ.14,000 கோடிக்கு தங்கம் விற்பனையானதாக நடைக்கடை வியாபாரிகள் தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு ரூ.11,000 கோடிக்கு தங்கம் விற்பனை ஆனநிலையில், இந்த அண்டு ரூ.14 ஆயிரம் கோடிக்கு விற்பனை ஆனதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். 80 % ஆபரணங்களாகவும், 20 % நாணயங்களாகவும் விற்பனை ஆனதாக நகை வியாபாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர். கடந்த ஆண்டை ஒப்பிடும் போது தங்கத்தின் மொத்த விலை 20% வரை அதிகரிந்துள்ள போதும், 3 முறை தங்கத்தின் விலை உயர்த்தப்பட்டும் நேற்றைய தினம் தங்க நகை வாங்க மக்கள் ஆர்வம் காட்டியது குறிப்பிடத்தக்கது.