தொழிற்சங்க கூட்டமைப்பின் வேலைநிறுத்தத்தால் முடங்கிய பேருந்து சேவைகள்... மக்கள் அவதி

தொழிற்சங்க கூட்டமைப்பின் வேலைநிறுத்தத்தால் முடங்கிய பேருந்து சேவைகள்... மக்கள் அவதி
தொழிற்சங்க கூட்டமைப்பின் வேலைநிறுத்தத்தால் முடங்கிய பேருந்து சேவைகள்... மக்கள் அவதி
Published on

அகில இந்திய தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் நடைபெறும் வேலைநிறுத்தப் போராட்டத்தின் காரணமாக, சென்னையில் பேருந்துகள் பெருமளவு இயங்காததால் பயணிகள் அவதியடைந்துள்ளனர்.

பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கக் கூடாது, மின்சார திருத்த சட்டத்தை அமல்படுத்தக்கூடாது என்பன உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், சென்னை கோயம்பேட்டில் மாநகர பேருந்துகள் இயக்கப்படாததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். சென்னையை பொருத்தவரை, 37பணிமனைகளில் இருந்து வழக்கமாக 3ஆயிரத்து 100 பேருந்துகள் இயக்கப்படும். ஆனால் இன்று வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக, 90% பேருந்துகள் இயக்கப்படவில்லை. விடுமுறைக்காக சொந்த ஊர் சென்றுவிட்டு, சென்னை திரும்பியவர்களுக்கு, நகர பேருந்துகள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இதனால், ஏராளமான பயணிகள் கோயம்பேடு பேருந்து நிலையத்திலேயே காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

பல்லவன் இல்லம், அண்ணாநகர், தியாகராயர் நகர், வடபழனி பகுதிகளிலும் அரசுப் பேருந்துகள் இயங்காததால், பணிக்குச் செல்பவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களும் பேருந்து கிடைக்காமல் தவித்து வருகின்றனர். குறிப்பாக, 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வு நடைபெறும் நிலையில், பேருந்துகள் இயக்கப்படாததால் தேர்வுக்கு செல்ல முடியாமல் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். போதிய பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனிடையே, சென்னையில் ஆட்டோக்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டு வருகின்றன. பேருந்து கிடைக்காமல் தவித்த பயணிகள் மின்சார ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில்களில் பயணித்து வருகின்றனர். இதனால், ரயில்களில் இன்று கூட்டம் அதிகமாகக் காணப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com