தென் சென்னை பகுதிக்கு மிகப்பெரிய குப்பை கூடமாக அமைந்திருப்பது பள்ளிகரணை பகுதியில் அமைந்துள்ள குப்பை கிடங்கு. சுமார் 225 ஏக்கர் பரப்பளவில் இந்த குப்பை கிடங்கானது 30 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு அமைந்துள்ளது. பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டு வரப்படும் குப்பைகள் அனைத்தும் இங்கு கொட்டப்படுகிறது. குறிப்பாக 30 மீட்டர் அளவுக்கு குப்பை கிடங்கின் உயரமானது அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக, இங்கு அமைந்துள்ள சதுப்பு நிலத்தின் நிலம், நீர், காற்று ஆகியன மாசு அடைந்து வருவதை சுட்டிக்காட்டி பல்வேறு அறிக்கைகள் வெளியாகி உள்ள நிலையில், சென்னை மாநகராட்சி சார்பில் சென்னை குப்பை கிடங்கில் உள்ள ஒரு பகுதியில் பயோ மைனிங் மற்றும் பல்லுயிர் பூங்கா அமைப்பதற்காக திட்டம் வரையறை செய்யப்பட்டுள்ளது.
இதற்காக சுமார் 93 ஏக்கரில் 99 கோடி ரூபாய் இத்திட்டத்திற்காக வரையறுக்கப்பட்டுள்ளது. அதற்காக இன்று பெருங்குடியில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இத்திட்டத்திற்கு குடியிருப்பு வாசிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.