தஞ்சை: கட்டி 4 ஆண்டுகளாக பயன்பாட்டுக்கு வராமலே கசியும் தண்ணீர் டேங்க் - அச்சத்தில் மக்கள்

தஞ்சை: கட்டி 4 ஆண்டுகளாக பயன்பாட்டுக்கு வராமலே கசியும் தண்ணீர் டேங்க் - அச்சத்தில் மக்கள்
தஞ்சை: கட்டி 4 ஆண்டுகளாக பயன்பாட்டுக்கு வராமலே கசியும் தண்ணீர் டேங்க் - அச்சத்தில் மக்கள்
Published on

தஞ்சை மாநகராட்சியில் புதிதாக கட்டப்பட்டு நான்கு ஆண்டுகளாகிக்கூட பயன்பாட்டிற்கு வராமல் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் தண்ணீர் கசிவதாகவும் உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்திருக்கின்றனர். 

தஞ்சை மாநகராட்சிக்குட்பட்ட 51வது வார்டில் புதிய வீட்டு வசதி வாரியம் அமைந்துள்ள நேதாஜி நகரில் ஒரு கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் 5 லட்சம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி 2014ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 2017 ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டது. நீர்த்தேக்கத் தொட்டி கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டுகளாகியும் இதுவரை பயன்பாட்டிற்கு வராமலேயே உள்ளது. இருந்தநிலையிலும் தற்போது பெய்த மழைக்காரணமாக நீர்த்தேக்கத் தொட்டியின் நான்குபுறமும் மழைநீர் கசிந்து வடிந்து வருகின்றன. மேலும் தொட்டியின் மேல்தளத்தில் பூசப்பட்டுள்ள சிமெண்ட் கான்கிரீட் ஆங்காங்கே சிதலமடைந்து வெடிப்புகள் ஏற்பட்டு உள்ளது.

அந்த குடிநீர் தொட்டி கட்டப்பட்டு உள்ள பகுதியில் நான்குபுறமும் வீடுகள் உள்ளதால் தொட்டியில் தேங்கிக் கசிந்துவரும் மழைநீரால் அச்சம் உள்ளதாக கூறுகின்றனர் அப்பகுதி மக்கள். புதிதாக கட்டப்பட்டுள்ள இந்த குடிநீர் தொட்டியில் குடிதண்ணீர் இன்னும் நிரப்பப்படாமல் இருக்கும் நிலையில், மழைநீர் தேங்கியே தொட்டி கசிந்துவருகிது, இன்னும் தொட்டி முழுவதும் குடி தண்ணீர் நிரப்பப்பட்டால் நான்குபுறமும் முழுமையாக கசிந்து எந்த நேரமும் தொட்டி இடிந்து விழுந்து விடும் என்ற அச்சம் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளதாகவும், எனவே அதை உடனடியாக  ஆய்வு செய்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கின்றனர் அப்பகுதி மக்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com