தூத்துக்குடி அருகே ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும், தங்களுக்கு அவை தேவையில்லை என்றும் கிராம மக்கள் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த ஆண்டு நடத்தப்பட்ட போராட்டம், துப்பாக்கிச்சூடு சம்பவங்களின் தொடர்ச்சியாக, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. ஆலையை மீண்டும் திறக்க அனுமதி கோரிய வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் பண்டாரம்பட்டி, குமரெட்டியபுரம் உள்ளிட்ட பகுதிகளில், 6 அம்ச நலத்திட்டஙகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
அதன்படி பண்டாரம்பட்டியில் பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப் பட்டதாகவும், பண்டாரம்பட்டியில் நடுவதற்காக மரக்கன்றுகள் கொண்டுவரப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆவேசமடைந்த கிராம மக்கள், ஊரின் நடுவே உள்ள பொதுத்திடலில் திரண்டு இரவு முழுவதும் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.