வாழ்வாதாரங்களை பாதுகாக்க ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என பண்டாரம்பட்டி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு
அளித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. அதில், கலந்துகொண்ட பண்டாரம்பட்டி கிராம மக்கள் வாழ்வாதாரங்களை பாதுகாக்க ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் எனக்கோரி மனு அளித்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்கள், “ஸ்டெர்லைட் ஆலை தூத்துக்குடியில் இயங்கிக் கொண்டிருந்த பொழுது அதனை நம்பியிருந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு தொடர்ந்து வேலை இருந்தது. தற்போது ஆலை மூடப்பட்டு கிடப்பதால் தொழிலாளர்கள் அனைவரும் வேலை இழந்து உள்ளனர். எனவே தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும்” எனத் தெரிவித்தனர்.
ஆலை மூடப்பட்டிருந்தாலும் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் மக்களுக்கு நலத்திட்டங்களை செய்துவருகிறது. ஆலை இயங்காததால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும்” எனத் தெரிவித்தனர்.